Cinema
விக்னேஷ் சிவனுடன் ஜோடி சேர்ந்த சிவகார்த்திகேயன்
எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள மிஸ்டர் லோக்கல் படம் விரைவில் திரைக்கு வருகிறது.அதைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் இன்று நேற்று நாளை இயக்குநர் ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். மேலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டியராஜ் இயக்கும் படத்திலும், இரும்புத்திரை இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில், லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக ஒப்பந்தமாகி உள்ளார். இந்தப் படத்திற்கு அனிரும் இசையமைக்கிறார். படத்தின் நாயகி குறித்த அறிவிப்பை லைகா வெளியிடவில்லை. விக்னேஷ் சிவன் இயக்குவதால், மீண்டும் நயன்தாராவுடன் சிவகார்த்திகேயன் நடிக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
ஜூலை 2019ல் படப்பிடிப்பு துவங்கப்பட்டு 2020ல் வெளியாகும் என இப்போதே லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.தன்னுடைய நான்காவது கனவு நிறைவேறிவிட்டது என்று கூறி சிவகார்த்திகேயனை இயக்குவது பற்றி ட்வீட் செய்துள்ளார் விக்னேஷ் சிவன்.இது குறித்து சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் ,அன்பான நண்பர்களுடன் சேர்வதில் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
ஃபாக்ஸ்கான் முதலீடு : சட்டபேரவையில் விளக்கிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!
-
தீபாவளி போனஸ் : கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு அறிவித்த தமிழ்நாடு அரசு!
-
“தகுதியான மகளிருக்கு டிச.15 முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்!” : துணை முதலமைச்சர் அறிவிப்பு!
-
“இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும்!” : இலங்கை பிரதமரின் இந்திய வருகையையொட்டி முதல்வர் கடிதம்!
-
“WhatsApp வதந்திகளை மட்டும் நம்பி உயிர் வாழும் பழனிசாமி” : அமைச்சர் ரகுபதி பதிலடி!