உலகம்

பிரபல Rapper குளியல் அறையில் மர்மமான முறையில் மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி: போலிஸ் விசாரணை!

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ராப் பாடகர் கூலியோ மர்மமான முறையில் மரணமடைந்தது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பிரபல Rapper குளியல் அறையில் மர்மமான முறையில் மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி: போலிஸ் விசாரணை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அமெரிக்காவைச் சேர்ந்தவர் கூலியோ. பிரபலமான ராப் பாடகரான இவர் தனது நண்பர் வீட்டின் குளியல் அறையில் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். இவரது மரணத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இவரது மரணம் குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகிறது. கூலியோ மரணம் ராப் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்குக் காரணம் ராப் உலகத்தின் முன்னோடிகளில் ஒருவராக இவர் இருந்துள்ளார்.

பிரபல Rapper குளியல் அறையில் மர்மமான முறையில் மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி: போலிஸ் விசாரணை!

1995ம் ஆண்டு வெளியான கேங்க்ஸ்டாஸ் பாரடைஸ் இசை ஆல்பம் இன்றும் உலகம் புகழ்பெற்றதாக இருக்கிறது. ராப் உலகில் நுழையும் இளைஞர்களை இன்னமும் இந்த ஆல்பம் கவரும் விதமாக இருந்து வருகிறது.

பிரபல Rapper குளியல் அறையில் மர்மமான முறையில் மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி: போலிஸ் விசாரணை!

1969ம் ஆண்டு இசைக்கான கிராமிய விருதை முதல் முறையாகக் கூலியோ வென்றார். 1980க்கு பிறகு ஐந்து முறை கிராமிய விருதுக்கு அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கூலியோவின் மறைவிற்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories