உலகம்

பிறந்த குழந்தைகளை விஷ ஊசி செலுத்தி கொலை செய்த செவிலியர்.. மகப்பேறு மருத்துவமனையில் நடந்த கொடூரம்!

அர்ஜென்டினாவில், செவிலியர் ஒருவர் பிறந்த குழந்தைகளை விஷ ஊசி செலுத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிறந்த குழந்தைகளை விஷ ஊசி செலுத்தி கொலை செய்த செவிலியர்.. மகப்பேறு மருத்துவமனையில் நடந்த கொடூரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அர்ஜென்டினாவில் கார்டோபா என்று ஒரு நகரம் உள்ளது. இங்குச் செயல்பட்டு வரும் மகப்பேறு மருத்துவமனையில் கடந்த மார்ச் முதல் ஜூன் மாதம் அவரை அடுத்தடுத்து பிறந்த 5 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.

இதையடுத்து குழந்தைகளின் இறப்பு குறித்து விசாரணை செய்தபோது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. முதலில் குழந்தைகள் இயற்கையாக மரணம் அடைந்துள்ளனர் என பெற்றோர்கள் முதலில் நினைத்துள்ளனர்.

பிறந்த குழந்தைகளை விஷ ஊசி செலுத்தி கொலை செய்த செவிலியர்.. மகப்பேறு மருத்துவமனையில் நடந்த கொடூரம்!

ஆனால், குழந்தைகளின் உடம்பில் பொட்டாசியம் அளவு அதிகமானால்தான் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து இறந்த குழந்தைகளின் உடல்கள் மறு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது, 2 குழந்தைக்கு விஷ ஊசி செலுத்திக் கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் அந்த மருத்துவமனையில் செவிலியராக வேலைபார்த்து வரும் பிரெண்டா அகுவேரோ என்பவர்தான் இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார்.

பிறந்த குழந்தைகளை விஷ ஊசி செலுத்தி கொலை செய்த செவிலியர்.. மகப்பேறு மருத்துவமனையில் நடந்த கொடூரம்!

இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏன் அவர் நன்றாகப் பிறந்த குழந்தைகளை விஷ ஊசி செலுத்திக் கொன்றார் என்பது குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    banner

    Related Stories

    Related Stories