உலகம்

உக்ரைன் - ரஷ்யா போர் : சோகமாக வீடியோ வெளியிட்ட புன்னகை மன்னன்.. CZN புராகின் மனிதநேயமிக்க செயல்!

உக்ரைன் - ரஷ்யா போரை நிறுத்தக் கோரி CZN புராக் சோகமாக சமைக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

உக்ரைன் - ரஷ்யா போர் : சோகமாக வீடியோ வெளியிட்ட புன்னகை மன்னன்.. CZN புராகின் மனிதநேயமிக்க செயல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் புராக் ஓஸ்டெமிர் (CZN Burak). சமையல் கலைஞரான புராகின் வீடியோ பார்க்காதவர்களே யாரும் இருக்கமாட்டார்கள். சிரித்தபடியே உணவை சமைப்பத்தில் புராக் ஓஸ்டெமிர் மிகவும் கைதேர்ந்தவர்.

இவரது வீடியோக்கள் இணையத்தில் வைரலான நிலையில் பலரும் புராக்கிற்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. அதன்படி, சிரித்தபடியே சமைக்கும் உணவை சாப்பிட பலரும் அவரது உணவகத்திற்குச் சென்று உணவை ருசித்துள்ளனர். இதனால் புராக்கும் உலகப் புகழ் அடைந்தார்.

இதன்மூலம் சில நாட்களிலேயே மிகப்பெரிய நட்சத்திர ஹோட்டல்களில் செஃப் பதவி கிடைத்தது. அதுமட்டுமல்லாது, இவருக்கு ஐக்கிய அமீரகம் மற்றும் துருக்கியில் மிகப்பெரிய ஹோட்டல் உள்ளது.

இந்நிலையில் தற்போது புராக் சோகமாக சமைக்கும் வீடியோவை பகிர்ந்து வருகிறார். CZN புராக் என்றதுமே பலருக்கும் நினைவுக்கு வருவது அவரது புன்னகை முகம் தான். இப்படி இருக்கையில், உக்ரைன் மீது நடக்கும் போரை நிறுத்த வலியுறுத்தி, இதுபோல் சோகமாக சமைக்கும் வீடியோவை பதிவிட்டு வருகிறார்.

வீடியோ வெளியிட்டு வருத்தம் தெரிவித்தது மட்டுமின்றி, உக்ரைனில் சிக்கியுள்ள மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களையும் புராக் அனுப்பி வருகிறார். புராக்கின் சோகமான வீடியோ ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்திய நிலையில், அவரின் மனிதநேய செயலுக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories