உலகம்

கோலா கரடிகளை அழிந்துவரும் உயிரினமாக அறிவித்தது ஆஸ்திரேலிய அரசு - பின்னணி என்ன?

ஆஸ்திரேலியாவின் கோலா கரடிகள் அழிந்து வரும் உயிரினம் என்று அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கோலா கரடிகளை அழிந்துவரும் உயிரினமாக அறிவித்தது  ஆஸ்திரேலிய அரசு - பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஆஸ்திரேலியாவின் வனப்பகுதியின் அடையாளமாக உலகம் முழுவதும் கோலா கரடிகள் புகழ்பெற்றவையாகும். 2019-20ல் ஏற்பட்ட காட்டுத்தீயால் இந்தக் கரடிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன என்று வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஆனால், அவற்றின் அழிவு நிலை அதற்கு முன்பே துவங்கி விட்டது என்று சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். பட்டினி, சோர்வு, பலவீனம், வறட்சி, நோய்கள் மற்றும் நிலங்களை பயன்பாட்டுக்குக் கொண்டு வருதல் உள்ளிட்ட காரணங்களினால், கரடிகளின் அழிவு தொடர்ந்து அதிகரித்து வருவதாக வன விலங்கு ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், கோலா கரடிகள் அழிந்து வரும் உயிரினம் என்று அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கோலா கரடிகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து வருவதாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் அவை அழியும் நிலையில் உள்ளன என்று அதிகாரப்பூர்வமாக ஆஸ்திரேலியா அறிவிப்பு வெளியிடாமல் இருந்தது.

இதனையடுத்து தற்போது, 2001ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் இருந்து கோலா கரடிகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 85 ஆயிரமாக இருந்தது. அந்த எண்ணிக்கை 20 ஆண்டுகளில், அதாவது 2021ஆம் ஆண்டில், 92 ஆயிரமாக சரிந்துள்ளது. இதனால் கோலா கரடிகளின் சரிவைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்று சுற்றுச்சூழல் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

banner

Related Stories

Related Stories