உலகம்

ஆண் குழந்தைக்காக கர்ப்பிணி தலையில் ஆணி அடித்த கொடூரம்: பகீர் சம்பவத்தின் பின்னணி என்ன?

ஆண் குழந்தைக்காக கர்ப்பிணி தலையில் ஆணி அடிக்கப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆண் குழந்தைக்காக கர்ப்பிணி தலையில் ஆணி அடித்த   கொடூரம்: பகீர் சம்பவத்தின் பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பாகிஸ்தானின், பெஷாவர் நகரின் வடமேற்கு பகுதியில் மருத்துவமனை ஒன்று உள்ளது. இங்கு சில நாட்களுக்கு முன்பு தலையில் ஆணி அடிக்கப்பட்ட நிலையில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் சிகிச்சைக்காக வந்துள்ளார்.

இதைப்பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்து, தலையில் ஏன் ஆணி அடிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து கேட்டுள்ளனர். இதற்கு அந்தப் பெண், ஆண் குழந்தை வேண்டு சில சடங்குகளை செய்யுமாறு உள்ளூர் வைத்தியரிடம் கூறினர்.

இதற்கு அவர் தலையில் ஐந்து ஆணிகளை அடித்தார். இதனால் எனக்கு கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. எனவே ஆணியை அகற்ற வேண்டும் என மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர் மருத்துவர்கள் கர்ப்பிணி பெண்ணின் தலையிலிருந்து ஐந்து ஆணிகளை அகற்றினர். இது குறித்து போலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனடிப்படையில் போலிஸார் மருத்துவமனையில் சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் அவர் கூறிய அந்த ஹீலர் யார் என்பது குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். ஆண் குழந்தைக்காக கர்ப்பிணி தலையில் ஆணி அடிக்கப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories