உலகம்

“கொரோனா தொற்று உள்ளதா என வெறும் 5 நிமிடங்களில் கண்டறியலாம்” - அமெரிக்க ஆய்வகம் சாதனை! #Corona

கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டறிந்து 5 நிமிடங்களில் பரிசோதனை முடிவுகளை அறிவிக்கும் இயந்திரத்தை அமெரிக்க ஆய்வகம் கண்டுபிடித்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அமெரிக்காவைச் சேர்ந்த அபாட் லேபாரட்டரீஸ் ஆய்வகம், கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டறிந்து 5 நிமிடங்களில் பரிசோதனை முடிவுகளை அறிவிக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.

சீனாவின் வூஹான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. உலகெங்கிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கியுள்ளது.

மேலும், உலகம் முழுவதும் 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 906 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.

“கொரோனா தொற்று உள்ளதா என வெறும் 5 நிமிடங்களில் கண்டறியலாம்” - அமெரிக்க ஆய்வகம் சாதனை! #Corona

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தவும், பரிசோதனைக்கான நேரத்தைக் குறைக்கவும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், விரைவான கொரோனா பரிசோதனை இயந்திரங்களைக் கண்டுபிடிக்க நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கின.

இதைத் தொடர்ந்து அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வக நிறுவனமான அபாட் லேபாரட்டரீஸ், 5 நிமிடங்களில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பதைக் கண்டறியும் வகையில் பரிசோதனை இயந்திரத்தை உருவாக்கியுள்ளது. இதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை அனுமதி வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக அபாட் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான ராபர்ட் ஃபோர்ட் கூறுகையில், “சிறிய டோஸ்டர் இயந்திரத்தின் அளவில் இந்தக் கருவி இருக்கும். இதன் மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தால் 5 நிமிடங்களில் கண்டறியலாம். தொற்று இல்லையென்றாலும் 13 நிமிடங்களில் முடிவுகள் தெரியும்.

“கொரோனா தொற்று உள்ளதா என வெறும் 5 நிமிடங்களில் கண்டறியலாம்” - அமெரிக்க ஆய்வகம் சாதனை! #Corona

அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்கள் மற்றும் சுகாதார மையங்களில் அவசரத் தேவைக்காக இதைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து இந்தப் பரிசோதனை இயந்திரம் விற்பனைக்கு வரும்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சில நிறுவனங்கள் இரண்டரை மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை செய்யும் வகையிலான இயந்திரங்களைக் கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அபாட் கண்டுபிடித்துள்ள இயந்திரம் மூலம் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories