வைரல்

இதுக்கு ஒரு எண்டே இல்லையா.. 2 மாதத்தில் 4வது முறை: மீண்டும் மாடு மோதி சேதமடைந்த வந்தே பாரத் ரயில்!

பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த இரண்டே மாதத்தில் காந்திநகர் - மும்பை வந்தே பாரத் விரைவு ரயில் மாடு மோதி 4வது முறையாகச் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுக்கு ஒரு எண்டே இல்லையா.. 2 மாதத்தில் 4வது முறை: மீண்டும் மாடு மோதி சேதமடைந்த வந்தே பாரத் ரயில்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் ரயில் சேவையை மேம்படுத்தும் வகையிலும் 75 நகரங்களை இணைக்கும் படி வந்தே பாரத் விரைவு ரயில் திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. இதன்படி கடந்த 2019ம் ஆண்டு டெல்லி - வாரணாசி இடையே இயங்கும் முதல் வந்தே பாரத் ரயில் திட்டத்தைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இதையடுத்து காந்தி நகர் - மும்பை, சென்னை - மைசூர் இடையே என இதுவரை 5 வழித்தடங்களில் வந்தே பாரத் விரைவு ரயில் சேவையைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். ஆனால் இந்த வந்தே பாரத் ரயில்கள் தொடர்ச்சியாகக் கால்நடைகள் மோதி விபத்துக்குள்ளாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இதுக்கு ஒரு எண்டே இல்லையா.. 2 மாதத்தில் 4வது முறை: மீண்டும் மாடு மோதி சேதமடைந்த வந்தே பாரத் ரயில்!

இந்நிலையில், காந்திநகர் - மும்பை வந்தே பாரத் ரயில் மீண்டும் மாடு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை காந்திநகரிலிருந்து மும்பை புறப்பட்ட வந்தே பாரத் ரயில் உத்வாதா - வாபி ரயில் நிலையம் இடையே வந்தபோது தண்டவாளத்தின் குறுக்கே வந்த மாடு மீது மோதியுள்ளது.இதில் ரயிலின் முன்பக்கம் சேதமடைந்தது.

இதனால் ரயில் நிறுத்தப்பட்டது. பின்னர் ரயில் மீண்டும் தொடர்ந்து இயக்குவதற்குப் பிரச்சனை இல்லை என உறுதி செய்யப்பட்டபிறகு வந்தே பாரத் ரயில் அங்கிருந்து சென்றது. கடந்த 2 மாதத்தில் மட்டும் இதே வழித்தடத்தில் மாடு மோதி நான்கு முறை வந்தே பாரத் ரயில் சேதமடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுக்கு ஒரு எண்டே இல்லையா.. 2 மாதத்தில் 4வது முறை: மீண்டும் மாடு மோதி சேதமடைந்த வந்தே பாரத் ரயில்!

இப்படி தொடர்ச்சியாக வந்தே பாரத் ரயில் கால்நடைகள் மீது மோதி சேதடைந்து வருவது ரயில் பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இப்படியான விபத்துகள் தொடராமல் இருக்க இந்திய ரயில்வே துறை உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories