வைரல்

குகைக்குள் மாட்டிக்கொண்ட சுற்றுலா பயணி.. ஆர்வக்கோளாறால் இறுதியில் அரங்கேறிய அவலம்: நடந்தது என்ன தெரியுமா?

குகை ஒரு தாழ்வாரத்தை போல் நீண்டு ஓரிடத்தில் திரும்பி சட்டென முடிந்தது. திரும்பிய இடத்தில் தரை சற்று உயரமாக படியை போல் மேலெழும்பி இருந்தது. அதற்கு மேலிருந்த சுவரில்தான் ஆச்சரியம்!

குகைக்குள் மாட்டிக்கொண்ட சுற்றுலா பயணி.. ஆர்வக்கோளாறால் இறுதியில் அரங்கேறிய அவலம்: நடந்தது என்ன தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஆர்வக்கோளாறான சுற்றுலா பயணி ஒருவன் ஊர் ஊராக சுற்றி அலுப்பாகிறான். தீவிரமாய் சிந்தித்ததில் காடு, மலை சுற்றலாம் என முடிவுக்கு வருகிறான். உலகம் வெவ்வேறாக விரிவதை பார்த்து அதன் முன்னால் தான் வெறும் ஒரு துணுக்குதான் என உணர்கிறான். அதே நேரம் பிற மனித துணுக்குகளை காட்டிலும் தான் சிறந்த துணுக்கு என பெருமை கொள்கிறான்.

ஒரு மலையில் ஓர் ஆச்சர்யம் அவனது கண்ணில் படுகிறது. குகை!

இதுவரை அவன் குகைக்குள் போனதே இல்லை. எத்தனை ஓர் அற்புத துணுக்கு அவனென பாருங்கள். ஆர்வம் தாளாமல் குகைக்குள் ஓடுகிறான். குகையை பார்த்துவிட வேண்டும். முடிந்தால் மனிதர்கள் இல்லாத குகைக்குள்ளேயே வாழ்ந்துவிட வேண்டும்.

குகைக்குள் மாட்டிக்கொண்ட சுற்றுலா பயணி.. ஆர்வக்கோளாறால் இறுதியில் அரங்கேறிய அவலம்: நடந்தது என்ன தெரியுமா?

குகை ஒரு தாழ்வாரத்தை போல் நீண்டு ஓரிடத்தில் திரும்பி சட்டென முடிந்தது. திரும்பிய இடத்தில் தரை சற்று உயரமாக படியை போல் மேலெழும்பி இருந்தது. அதற்கு மேலிருந்த சுவரில்தான் ஆச்சரியம்!

பல வகை கோடுகள் கிறுக்கப்பட்டிருந்தன.

யார் இங்கு வந்திருப்பார்? எதற்கு இந்த கோடுகள் போட்டிருப்பார்? ஒன்றும் தெரியவில்லை.

அந்த குகையை கண்ட முதல் மனிதனாக தான் இருக்க வேண்டும் என விரும்பியவனுக்கு சற்று ஏமாற்றம்தான். சுற்றிமுற்றி பார்த்தான். ஆங்காங்கே சில எலும்புத் துண்டுகள் கிடந்தன. ஏதேனும் வேட்டையாக இருந்திருக்கும். இந்த கோடு வரைந்த மனிதர்களில் யாரையேனும் ஏதோவொரு மிருகம் வேட்டையாடி உண்டு சென்றிருக்கலாம்.

எத்தனை கால குகையாக இருக்கும் என குகையின் தொன்மையை ஆய்வு செய்ய அவன் முடிவெடுத்தபோது திடுமென ஒரு சத்தம். கிடுகிடுவென பேரிரைச்சல். மொத்த மலையும் இறங்கி விழுவது போன்ற ஓர் உணர்வு. நிலநடுக்கமா? குகையுடன் தன் கதை முடிகிறது என நினைத்தான். சில கணங்கள்தான். சத்தம் நின்றுவிட்டது. ஆனால் முன்பு இருந்த வெளிச்சம் இப்போது குறைந்திருந்தது.

குகைக்குள் மாட்டிக்கொண்ட சுற்றுலா பயணி.. ஆர்வக்கோளாறால் இறுதியில் அரங்கேறிய அவலம்: நடந்தது என்ன தெரியுமா?

மெதுவாய் வெளியே வந்து பார்த்தான். அய்யோ.. பாதை மூடியிருக்கிறது.

விழுந்தடித்து ஓடி வாசலை அடைந்தான். ஏதோ ஒரு பாறை விழுந்து மொத்த வாசலும் மூடப்பட்டிருக்கிறது. அந்த பாறையின் எடை அவனது சக்தியை தாண்டியதாக இருந்தது. இருந்தாலும் முட்டி பார்த்தான். தள்ளி பார்த்தான். தசை பிடித்துக் கொண்டதுதான் மிச்சம்.

கோபமும் தன்னிரக்கமும் பொங்கி வந்தது. இத்தனை காலமில்லாமல், தான் வந்த பிறகு ஏன் குகை மூடிக் கொள்ள வேண்டும்? குகையை பார்க்க விரும்பியது குற்றமா? இனி வெளியே செல்ல முடியாது. எப்போதுமே வெளியே செல்ல முடியாது. ஏதேனும் அதிசயம் நடந்தால்தான் உண்டு. கண்ணீர் வழிந்தது.

பல மணி நேரங்கள் ஓடின. நேரங்கள் நாட்களாகின. அநேகமாக நாட்கள் மாதங்களாகி இருக்கலாம், யாருக்கு தெரியும்? குகையை அங்குலம் அங்குலமாக அலசி பார்த்துவிட்டான் அவன். பையில் இருந்த உணவும் தண்ணீரும் தீரும் கட்டத்தை எட்டிக் கொண்டிருந்தது.

உயிர் பயத்தை விட என்ன செய்வது என்கிற கேள்விதான் இப்போது அவனுக்கு அதிகம் இருந்தது.

கத்தினான். பாடினான். புலம்பினான். வெறித்து பார்த்திருக்கிறான். முடியை பின்னியிருக்கிறான். எலும்பை கொண்டு நிலத்தை தோண்ட முயன்றிருக்கிறான். சில சிறு ஆபரணங்கள் கிடைத்தன. நைந்து போன சில சிகரெட் துண்டுகள். பிறகு சில சாக்பீஸ் துண்டுகள்.

சும்மாவே இருந்து அலுப்பாகி சமீபமாக சுவரின் கோடுகளை இணைக்க முற்பட்டு புது கோடுகளை வரைந்து கொண்டிருக்கிறான் அவன். சில உண்மைகள் புலப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே இருந்த கோடுகளில் சில அழிந்து போயிருப்பதை கண்டுபிடித்தான். அழிந்த கோடுகளை இருக்கும் கோடுகளுடன் இணைக்க முயன்றால் ஒரு பெரிய ஓவியம் இருக்குமென தெரிந்தது. உடல் சிலிர்த்தது. இதை ஏன் முன்னமே யோசிக்கவில்லை.

கோடுகளை இணைக்கும் முயற்சியில் ஓவியத்துக்குள் ஓவியமென பல ஓவியங்கள் வெளிப்பட்டுக் கொண்டிருந்தன. அவ்வப்போது ஓய்வெடுத்து அவன் கோடுகளை வரைந்து கொண்டிருந்தான். எத்தனை நாட்களோ தெரியாது.

குகையாக பூமியும் உள்ளே சென்ற பயணியாக நாமும் குகை மூடிய பாறையாக காலநிலை மாற்றமும் இன்று!

banner

Related Stories

Related Stories