வைரல்

செண்டைமேள வெர்ஷனில் வைரலாகும் இசைப்புயலின் ‘முக்காலா முக்காபுலா’! (வீடியோ)

‘காதலன்’ படத்தில் இடம்பெற்ற ‘முக்காலா முக்காபுலா’ பாடலை செண்டைமேள இசைகொண்டு உருவாக்கியிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

செண்டைமேள வெர்ஷனில் வைரலாகும் இசைப்புயலின் ‘முக்காலா முக்காபுலா’! (வீடியோ)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஷங்கரின் இயக்கத்தில் 1994ம் ஆண்டு வெளியான படம் ‘காதலன்’. இப்படத்தில், பிரபுதேவா, நக்மா, வடிவேல் என பலர் நடித்திருப்பர். இந்தப் படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

படத்தில் வரும் ஒவ்வொரு பாடல்களும் இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்றளவும் பெரும்பாலான இசை மற்றும் தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரைட் ப்ளேலிஸ்ட்டில் இருக்கிறது.

அதிலும், ‘ஊர்வசி ஊர்வசி’, ‘முக்காலா முக்காபுலா’ பாடல்களையெல்லாம் முணுமுணுக்காதவர்கள் என்றால் அது அரிதே. அண்மையில் ஊர்வசி பாடலை ஏ.ஆர்.ரஹ்மானே சமகாலத்துக்கு ஏற்றாற்போல், ReCreate செய்திருந்தார்.

இவ்வாறு இருக்கையில், கேரளாவின் பாரம்பரிய இசையான செண்டைமேளத்தில் ‘காதலன்’ படத்தில் வரும் முக்காலா முக்காபுலா பாடலை இசைத்துள்ளனர்.

நிகழ்ச்சி ஒன்றில் இந்தப் பாடல் செண்டைமேளம், பேண்ட் வெர்ஷனில் இசையமைக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பிரபல பின்னணி பாடகி ஸ்வேதா மேனன் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோவை தற்போது பல்லாயிரம் பேர் பகிர்ந்து சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories