வைரல்

ஓட்டலுக்கு சொந்தமான பொருட்களை திருடிய இந்திய குடும்பம் : வெளிநாட்டில் சிக்கிய சம்பவம்! (VIDEO)

பாலி நாட்டில் ஓட்டலுக்குச் சொந்தமான பொருட்களைத் திருடிய இந்தியக் குடும்பம் கையும் களவுமாக மாட்டிக் கொண்டனர்.

ஓட்டலுக்கு சொந்தமான பொருட்களை திருடிய இந்திய குடும்பம் : வெளிநாட்டில் சிக்கிய சம்பவம்! (VIDEO)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

பாலி நாட்டிற்குச் சுற்றுலா சென்ற இந்தியக் குடும்பம் ஒன்று, தாங்கள் தங்கியிருந்த விடுதியில் இருந்து, விடுதிக்குச் சொந்தமான சில பொருட்களைத் திருடி கையும் களவுமாக மாட்டிய வீடியோ வெளியாகி வைரலானது. அறையை காலி செய்து கிள்ம்பும் போது, சந்தேகத்தின் பேரில் அவர்களின் உடைமைகளை விடுதி ஊழியர்கள் சோதனை செய்தபோது கையும் களவுமாக மாட்டிக் கொண்டனர்.

அந்த வீடியோவில், இந்தியக் குடும்பத்தினரின் பெட்டிகளில், ஓட்டலுக்குச் சொந்தமான பொருட்கள் இருப்பது தெரிகிறது. அதற்கு அந்தக் குடும்பத்தினர், “மன்னித்துவிடுங்கள். நாங்கள் அதற்குக் கூடுதல் பணம் கொடுத்து விடுகிறோம்” என்கின்றனர். உடனே ஓட்டல் ஊழியர், “உங்களிடம் அதிகப் பணம் இருக்கலாம். ஆனால், இது மரியாதைக் குறைவான செயல்.” என்கிறார். இந்த வீடியோவைப் பகிர்ந்து, வெளிநாடு சென்று இந்தியாவை அவமானப்படுத்திவிட்டார்கள் என்று அந்த இந்தியக் குடும்பத்தை பலர் சமூக வலைதளங்களில் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories