வைரல்

போஸ்டர் ஒட்டி மதுரை ஆட்சியரை பாராட்டும் மக்கள் - நேர்மைக்கு தண்டனை கொடுத்த அரசு!

காலியாக இருந்த 1500 சத்துணவு பணியாளர்களை நியமித்த மதுரையின் முன்னாள் ஆட்சியருக்கு அப்பகுதி மக்கள் நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

நன்ம்மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த நடராஜன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக, சுகாதாரத்துறை இணை செயலாளராக இருந்த நாகராஜன் ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.

மக்களவைத் தேர்தலின் போது மதுரையில் தேர்தல் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க சிறப்பு அதிகாரியாக மதுரை மாவட்ட ஆட்சியராக நாகராஜன் பெறுப்பெற்றார். அதன் பின்னர் தேர்தலில் நாளில் ஆளும் கட்சி பல இடையூறுகள் செய்ய முயன்றப் போது அதனை சாதுரியமாக கையாண்டு பிரச்சனையை முடித்துவைத்துள்ளார்.

அதன் பின்னர் தேர்தல் முடிந்த பிறகு ஆட்சியர் நாகராஜன், அரசு மருத்துவமனைகள், பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பழுதானவற்றை சரிசெய்ய ஆட்சியர் நிதியில் இருந்து பணம் ஒதுக்கியதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் காலியாக உள்ள சத்துணவு பணி இடங்களுக்கு, நேரடியாக தேர்வு செய்யும் முறை மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் அவர்களுக்கு பணி ஆணை வழங்காமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது.

இதனை அறிந்த ஆட்சியர் நாகராஜன் அந்த பணியிடங்களுக்கு தேர்வான பணியாளர்கள் பட்டியலை தயார் செய்து, அந்த பட்டியலில் இருந்த 1500 பேருக்கும், 3ம் தேதி, இரவோடு இரவாக பணி ஆணை கொடுத்துள்ளார். சிபாரிசுகளை விரும்பாததால் நேரடியாகவே பணி ஆணைகளை வழங்கியுள்ளார்.

சிபாரிசுகளை ஏற்காமல் நேர்மையாக செயல்பட்டதால், அடுத்த நாளே (4-ம் தேதி) அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இருந்தாலும் ஆளும் அரசின் அதிகாரத்திக்குக் அடிபணியாத ஆட்சியர் நாகராஜன் முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

நாகராஜனின் செயலை பாராட்டி மதுரை எம்.பி சு.வெங்கடேசன் ஃபேஸ்புக்கில் பதிவு செய்திருக்கிறார். அதில் “1500 குடும்பங்களில் ஒளியேற்றி இருக்கிறீர்கள். நல்லதை செய்ததற்காக தீயவர்களால் தண்டிக்கப்படுவது சிறந்த வெகுமதியே! சென்று வாருங்கள் திரு.நாகராஜன் இ.ஆ.ப அவர்களே! மதுரை உங்களைப் போற்றும்.” என பாராட்டியுள்ளார்.

போஸ்டர் ஒட்டி மதுரை ஆட்சியரை பாராட்டும் மக்கள் - நேர்மைக்கு தண்டனை கொடுத்த அரசு!

மறுபுறம், சத்துணவு பணியாளர்களை நியமித்த ஆட்சியருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, மதுரை நகரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு அப்பகுதி மக்கள் தங்கள் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories