வைரல்

டோல்கேட்டில் பணத்தை திருடிச் சென்ற குரங்கு! வீடியோ

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரிலுள்ள சுங்கச்சாவடிக்குச் சென்ற காரிலிருந்து வெளியே வந்த குரங்கு, பணப் பெட்டியிலிருந்து (cash box) 5 ஆயிரம் ரூபாயைத் திருடிச் சென்றுள்ளது.

டோல்கேட்டில் பணத்தை திருடிச் சென்ற குரங்கு! வீடியோ
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரின் பாரா பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் கொடுக்கும் இடத்தில் ஒரு கார் வந்து நின்றது.

அந்தக் காரிலிருந்து வெளியே வந்த குரங்கு ஒன்று , சுங்கச் சாவடி ஊழியரைத் தாண்டிச் சென்று அங்கிருந்த பணப் பெட்டியிலிருந்து 5,000 ரூபாய் பணத்தைத் திருடிச் சென்றது.இது அனைத்தும் கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளது.

இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, முன்னரே இரண்டு முறை இதுபோன்று சம்பவம் நடைபெற்றுள்ளது என்று சுங்கச் சாவடியில் வேலை பார்ப்போர் கூறுகின்றனர்.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

banner

Related Stories

Related Stories