இந்தியாவில் வாகன உற்பத்தியும், அதன் விற்பனையும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும் நிலையில், நாட்டில் பிரீமியம் டயர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.
அத்தேவையை ஈடுகட்டும் வகையில், முன்னணி கார் டயர் தயாரிக்கும் நிறுவனமான Michelin India, சென்னைக்கு அருகில் உள்ள தேர்வாய் கண்டிகை பகுதியில் ரூ. 564 கோடி மதிப்பீட்டில் பிரீமியம் கார் டயர் தொழிற்சாலையை நிறுவவுள்ளதாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே, Michelin India நிறுவனத்தின் கார் டயர் தயாரிப்பு தொழிற்சாலை, தமிழ்நாட்டின் தேர்வாய் கண்டிகை பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பாக இயங்கி வருவதை தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள Michelin India நிறுவனத்தில் 2,800 பேர் வேலை செய்து வருகிறார்கள். தற்போது இந்த பிரீமியம் கார் தயாரிப்பு தொழிற்சாலை அமைப்பதன் மூலம் கூடுதலாக 200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக அளவில் புகழ்பெற்ற Michelin டயர் தயாரிப்பு நிறுவனம், பிரான்ஸ் நாட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.