தமிழ்நாடு

"உரிமைகளைப் பறிக்கும் ஆளுநர்" : உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் : முழு விவரம்!

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.

"உரிமைகளைப் பறிக்கும் ஆளுநர்" :  உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் : முழு விவரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் தாங்கள் ஆட்சியில் இல்லாத மற்ற மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அம்மாநில அரசுக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. குறிப்பாகத் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில், மாநில அரசுகள் கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் அம்மாநில ஆளுநர்கள் அடாவடித்தனமாக நடந்து கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றதில் இருந்தே மாநில அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார். குறிப்பாகச் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல், வேண்டும் என்றே இழுத்தடித்து வருகிறார். அதுமட்டுமல்லாது, ஒரு ஆளுநராக இருந்து கொண்டு பொது நிகழ்ச்சிகளில் தனது சனாதன கருத்துக்களைப் பேசி வருகிறார். மேலும் பா.ஜ.க தலைவர்போல் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளை ஆளுநர் விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநருக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் 98 பக்கங்கள் கொண்ட மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

"உரிமைகளைப் பறிக்கும் ஆளுநர்" :  உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் : முழு விவரம்!

அதில், "தமிழ்நாடு அரசு பல முக்கியமான சட்ட மசோதாக்களை ஆளுநருக்கு அனுப்பி வைக்கிறது. அது மட்டுமின்றி பல்வேறு கொள்கை முடிவுகளையும் அனுப்பி வைக்கிறது. இதில் ஆளுநர் உடனுக்குடன் முடிவு எடுக்காமல் தனது பதவியை துஷ்பிரயோகம் செய்கிறார். இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக உள்ளது. ஆளுநரின் இத்தகைய நடவடிக்கையால் தமிழ்நாட்டு மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது" என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

நிலுவையில் இருக்கும் மசோதாக்கள்:-

தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக மசோதா, தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கியல் அறிவியல் பல்கலை. சட்ட மசோதா, பல்கலைக்கழக விதிகளை அமல்படுத்துவது தொடர்பான மசோதா, சித்தா- ஆயுர்வேத - ஹோமியோபதி பல்கலைக்கழகம் வளர்ச்சி தொடர்பான மசோதா, அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக விதி தொடர்பான மசோதா, எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் தொடர்பான மசோதா, முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, பி.வி.ரமணா,சி.விஜயபாஸ்கர், மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான மசோதா, நீண்ட நாள் சிறையில் இருக்கும் கைதிகள் விடுதலை தொடர்பான மசோதா உள்ளிட்ட 25 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் கொடுக்காமல் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories