தமிழ்நாடு

”நஞ்சு தோய்ந்த எண்ணங்களோடு நயமாகப் பேசும் குபீர் நாட்டுப்பற்றாளர்கள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

தமிழ் நிலத்தின் உரிமைகளைக் காக்கத் தங்கள் உயிரையும் துச்சமென நினைத்த மான மறவர் மருதிருவரின் புகழ் ஓங்குக என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

”நஞ்சு தோய்ந்த எண்ணங்களோடு நயமாகப் பேசும் குபீர் நாட்டுப்பற்றாளர்கள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விடுதலை போராட்டத்தில் பங்கேற்று தங்களது இன்னுயிர்களை கொடுத்த மருது பாண்டியர்களின் நினைவு நாளை முன்னிட்ட சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உள்ள மருது பாண்டியர்கள் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட பலர் மருது பாண்டியர்கள் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதற்கிடையில் தமிழ் நிலத்தின் உரிமைகளைக் காக்கத் தங்கள் உயிரையும் துச்சமென நினைத்த மான மறவர் மருதிருவரின் புகழ் ஓங்குக என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது x சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், "சின்ன மருதும், பெரிய மருதும் பீரங்கிகளுக்கு முன்னால் வளரியால் வாகை சூடியவர்கள். இவர்கள் வைத்திருந்த வளரிக்கு முன்னால் பீரங்கிகள் சரியும் என்று எழுதினான் பிரிட்டிஷ் அதிகாரி கர்னல் வெல்ஷ்! இது 1801-ஆம் ஆண்டு!

கழக அரசு அமைந்ததும் மருது சகோதரர்கள் சிலையைச் சென்னையில் அமைக்க 34 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுச் சிலை திறந்துவைக்கப்பட்டுள்ளது. கலைஞர் கைவண்ணத்தில் 'தென்பாண்டிச் சிங்கம்' எனக் கலை வடிவம் பெற்று, வாளுக்குவேலி வழியாகக் காலத்தால் அழியாத காவியமாக அவர்களது கதை நிலைத்திருக்கிறது.

தி.மு.கழக அரசு அமையும்போதெல்லாம் விடுதலை வீரர்களின் புகழ் திக்கெட்டும் போற்றப்படுகிறது. நஞ்சு தோய்ந்த எண்ணங்களோடு நயமாகப் பேசும் திடீர் குபீர் நாட்டுப்பற்றாளர்களின் வரலாற்றைத் தேசத் தந்தை காந்தியாரின் இறுதி நாட்கள் சொல்லும். இந்த கோட்சே கூட்டத்தைத்தான் மகாகவி பாரதியார் 'நடிப்புச் சுதேசிகள்' எனப் பாடினார்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories