தமிழ்நாடு

‘மக்கள் குறை கேட்டல்’: குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்கு உடனடி ஏற்பாடு.. கனிமொழி MP செய்த நெகிழ்ச்சி !

'மக்கள் களம்-மக்கள் குறை கேட்டல்' நிகழ்ச்சியில் பெண் ஒருவர் தனது குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்கு உதவி கேட்டு கனிமொழி MPயிடம் மனு அளித்திருந்த நிலையில், அதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

‘மக்கள் குறை கேட்டல்’: குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்கு உடனடி ஏற்பாடு.. கனிமொழி MP செய்த நெகிழ்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் சோழபுரம் ஊராட்சியில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தலைமையில் கடந்த 8-ம் தேதி 'மக்கள் களம்' என்ற கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மக்கள் குறைகளை கேட்டறிந்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

‘மக்கள் குறை கேட்டல்’: குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்கு உடனடி ஏற்பாடு.. கனிமொழி MP செய்த நெகிழ்ச்சி !

அப்போது சோழபுரம் பகுதியில் வசிக்கும் ராஜலட்சுமி என்பவர் தனது 5 வயது மகள் தேன்மொழி என்ற குழந்தைக்கு பேசும் திறன் குறைபாட்டினை சரிசெய்வதற்கு தேவையான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு கனிமொழி எம்.பியிடம் தான் அளித்த மனுவில் குறிப்பிட்டு கோரிக்கை வைத்திருந்தார். இதையடுத்து, அந்த மனுவை உடனடியாக பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு மருத்துவர்களிடம் கனிமொழி எம்.பி. அறிவுறுத்தினார்.

‘மக்கள் குறை கேட்டல்’: குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்கு உடனடி ஏற்பாடு.. கனிமொழி MP செய்த நெகிழ்ச்சி !

அதனைத் தொடர்ந்து, மக்களை தேடி மருத்துவக்குழுவினர் ராஜலட்சுமியின் இல்லத்திற்கே சென்று குழந்தை தேன்மொழியை பரிசோதனை செய்து பேசும் திறன் பயிற்சி அளித்தனர் மேலும் இனி ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைதோறும் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை மூலம் குழந்தையின் பேசும் திறன் விரைவில் மேம்படும் என்று மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

'மக்கள் களம்' நிகழ்ச்சியின்போது, குழந்தைக்கு பேசும் திறன் குறை பாட்டினை சரி செய்வதற்கு மனு அளித்த உடனேயே, அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்க கனிமொழி எம்.பி ஏற்பாடு செய்தார். 'மக்கள் களம்' ;மக்கள் குறை கேட்டல் நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்ட மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.

banner

Related Stories

Related Stories