தமிழ்நாடு

”முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டு அஞ்சும் பா.ஜ.க”.. ஏன் என விளக்கிய அமைச்சர் உதயநிதி!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டு பா.ஜ.க அஞ்சுகிறது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

”முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டு அஞ்சும் பா.ஜ.க”.. ஏன் என விளக்கிய அமைச்சர் உதயநிதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மயிலாடுதுறையில் தி.மு.கவின் மூத்த முன்னோடிகளுக்குப் பொற்கிழி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழிகளை வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "கலைஞர் பெயரில் உள்ள அறக்கட்டளையில் சார்பில் கழக மூத்த முன்னோடிகளுக்கு மாதம் 8 பேருக்கு ரூ. 25 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 5 கோடியே 50லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு வருடங்களில் மூத்த முன்னோடிகளுக்கு எனது கைகளினால் ரூ. 23 கோடியே 80 லட்சம் உதவித் தொகை வழங்கியுள்ளேன்.இந்தியாவிலேயே எந்த இயக்கமும் செய்யாததை தி.மு.க செய்துள்ளது.

நமது முதலமைச்சர் தலைமையில் திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக நடந்து வருகிறது. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஒன்றிய அரசு அமலாக்கத்துறை, வருமானவரித்துறை உள்ளிட்டவற்றை ஏவிப் பயமுறுத்தப் பார்க்கிறது.

”முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டு அஞ்சும் பா.ஜ.க”.. ஏன் என விளக்கிய அமைச்சர் உதயநிதி!

தி.மு.கவினர் எமர்ஜென்சியையும் மிசாவையும் பார்த்தவர்கள். ஒன்றிய அரசின் ஏவல் துறைகளைக் கண்டு தி.மு.க அஞ்சாது. பா.ஜ.கவுக்கு எதிரான அணியை ஒருங்கிணைப்பதில் நமது முதலமைச்சர் முக்கிய பங்காற்றி வருகிறார். இதனால்தான் நமது முதலமைச்சரைப் பார்த்து பா.ஜ.க அஞ்சுகிறது. எனவே தான் தி.மு.கவை அசைத்துப் பார்க்க நினைக்கிறது.

”முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டு அஞ்சும் பா.ஜ.க”.. ஏன் என விளக்கிய அமைச்சர் உதயநிதி!

மணிப்பூர் மாநிலம் பற்றி ஏரிகிறது. அங்குச் சென்று அமைதியை ஏற்படுத்தாமல் பிரதமர் மோடி அமெரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வேலுமணி உள்ளிட்டவர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. ஆனால் ஏன் அவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை?.

சோதனை என்ற பெயரில் அ.தி.மு.கவை போல் தி.மு.கவை மாற்றி விடலாம் என பா.ஜ.க நினைக்கிறது. ஆனால் பெரியார், அண்ணா, கலைஞர் அவர்களால் வளர்த்தெடுத்த கழகம் என்று அவர்களுக்குத் தெரியவில்லை" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories