தமிழ்நாடு

ரூ.600 கோடியில் டைடல் பார்க்.. திருச்சி மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சொன்ன அமைச்சர் தங்கம் தென்னரசு!

ரூ.600 கோடியில் டைடல் பார்க் திருச்சியில் அமைக்கப்படும் என பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

ரூ.600 கோடியில் டைடல் பார்க்.. திருச்சி மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சொன்ன அமைச்சர் தங்கம் தென்னரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 -2024-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 20 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அடுத்த நாள் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இன்றைய சட்டப்பேரவையில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு 22 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

ரூ.600 கோடியில் டைடல் பார்க்.. திருச்சி மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சொன்ன அமைச்சர் தங்கம் தென்னரசு!
ரூ.600 கோடியில் டைடல் பார்க்.. திருச்சி மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சொன்ன அமைச்சர் தங்கம் தென்னரசு!

1. தமிழ்நாட்டில் ஒரு மேம்பட்ட உற்பத்தி மையம் நிறுவப்படும்.

2. ஒழுங்குமுறைச் செலவினங்களைக் குறைப்பதன் மூலம் வணிகம் புரிதல் எளிதாக்கப்படும்.

3. சிப்காட் சூளகிரி தொழிற்பூங்காவில் தொழிலாளர்கள் மற்றும் பயிற்சி பெறுநர்கள் பயன்பாட்டிற்காக 600 படுக்கைகள் கொண்ட தங்குமிடம் ரூ.30 கோடியில் அமைக்கப்படும்.

4. இருங்காட்டுக் கோட்டை தொழிற்பூங்கா மற்றும் செய்யாறு தொழிற்பூங்காக்களில் தொழிலாளர்களின் தங்குமிட தேவையை பூர்த்தி செய்ய தலா 200 படுக்கை வசதிகள் கொண்ட இரண்டு தங்குமிடங்கள் ரூ.20 கோடியில் அமைக்கப்படும்.

5. சிப்காட் தொழிற்பூங்காக்களில் ஸ்மார்ட் நீர் அளவீட்டு அமைப்புகள் ரூ.20 கோடியில் உருவாக்கப்படும்.

6. மணப்பாறை, தேனி, திண்டிவனம் மற்றும் சூளகிரி ஆகிய சிப்காட்டின் 4 புதிய தொழிற்பூங்காக்களில் ரூ.5 கோடியில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்படும்.

7. விருதுநகர், சூளகிரி, தேனி ஆகிய சிப்காட் தொழிற்பூங்காக்களில் 4.50 கோடியில் நிர்வாக அலுவலக வளாகம் கட்டப்படும்.

8. மறுசுழற்சி முறையில் பெறப்படும் நீரினைக் கொண்டு 9 சிப்காட் தொழிற்பூங்காக்களின் தொழில் நீர் தேவையை பூர்த்தி செய்ய 1.20 கோடியில் விரிவான சாத்தியக்கூறு ஆய்வு செய்யப்படும்.

9. சிப்காட் நிறுவனம் 90 லட்சம் செலவில் ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கி, ஆவண மேலாண்மை அமைப்பு ஏற்படுத்தப்படும்.

10. சிப்காட் நிறுவனம், 3000 ஏக்கர் நிலப்பரப்பிற்கு 25 லட்சம் செலவில் புவியியல் தகவல் முறைமை வரைபடம் ஏற்படுத்தப்படும்.

11. திருவள்ளூர் மாவட்டம் காரணியில் 3000 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் சுமார் 250 ஏக்கரில் ரூ.100 கோடியில் தொழில் பூங்கா டிட்கோ நிறுவனத்தால் அமைக்கப்படும்.

ரூ.600 கோடியில் டைடல் பார்க்.. திருச்சி மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சொன்ன அமைச்சர் தங்கம் தென்னரசு!

12. நகரங்களுக்கு இடையேயான வான்வெளி பயணத்திற்கு ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்த உதவும் வகையில் தமிழ்நாடு வான்வழி இணைப்புத் திட்டத்திற்கான (TNREACH) வழிமுறை வகுக்கப்படும்.

13. டைசல் உயிரியின் முகவரி என்ற பெயரில் டைசல் புத்தாக்க மையம் சுமார் 10 கோடியில் சென்னை மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் அமைக்கப்படும்.

14. தொழில் துறையின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் திட்டங்களை விரைவாகவும், முழு செயல்திறனோடும் பொறுப்புணர்வோடும் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய, தலைமைப் பொறியாளர் அல்லது கண்காணிப்புப் பொறியாளர் தலைமையில் ஒரு பிரத்யேக பொறியியல் பிரிவு உருவாக்கப்படும்.

15. திருச்சியில் ரூ.600 கோடியில் டைடல் பார்க் ஒன்று நிறுவப்படும்.

16. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ரூ.70 கோடியில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும்.

17.அரியலூர் சிமெண்ட் வளாகத்தில் இயங்கும் அரசு நகர் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் உயிரியல் ஆய்வகம் மற்றும் இயற்பியல் ஆய்வுக்கூடம் உட்பட 4 வகுப்பறைகள் ரூ.1.32 கோடியில் கட்டப்படும்.

18. அரியலூர் சிமெண்ட் ஆலையில் இயங்கி வரும் டான்செம் மேல்நிலைப் பள்ளியில் ரூ.30 லட்சம் செலவில் உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும்.

19. அரியலூர் சிமெண்ட் தொழிற்சாலை வளாகத்தைச் சுற்றி 3400 மீட்டர் நீளம் புதிய வளாகச் சுவர் ரூ.4 கோடி செலவில் கட்டப்படும்.

20. அரியலூர் சிமெண்ட் ஆலையில் ஆனந்தவாடி மற்றும் கல்லங்குறிச்சி சுரங்ககுத்தகை எல்லையை ஒட்டி இரும்பு முள்வேலி, மூடிய மின்சுற்று தொலைக்காட்சி கருவிகள் ரூ.1.50 கோடி செலவில் அமைக்கப்படும்.

21. டான்செம் நிறுவன வள திட்டமிடல் 5.20 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.

22. ஆலங்குளம் சிமெண்ட் ஆலையில் 1.20 கோடியில் விருந்தினர் மாளிகை, ஆய்வகம், விற்பனை மற்றும் கணக்குத்துறை கட்டடங்கள் மற்றும் பணியாளர் குடியிருப்பு புதுப்பிக்கப்படும்.

banner

Related Stories

Related Stories