தமிழ்நாடு

போலியாக அரசு முத்திரைகள் தயாரித்து மோசடி செய்த அ.தி.மு.க நிர்வாகி.. 5 பேரை அதிரடியாக கைது செய்த போலிஸ்!

தூத்துக்குடியில் போலி அரசு முத்திரைகளைத் தயாரித்ததாக அ.தி.மு.க நிர்வாகி உள்ளிட்ட 5 பேரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

போலியாக அரசு முத்திரைகள் தயாரித்து மோசடி செய்த அ.தி.மு.க நிர்வாகி.. 5 பேரை அதிரடியாக கைது செய்த போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தூத்துக்குடி இந்திரா நகரை சேர்ந்தவர் வண்டி தேவன். இவர் தனது உறவினர் காசிராஜன். இவர் வீட்டுப் பத்திரம் காணாமல் போய்விட்டதால், புதிய பத்திரம் வாங்க வேண்டும் என்று புதியம்புத்தூர் பவுண்டு தெருவைச் சேர்ந்த அ.தி.மு.க ஒட்டப்பிடாரம் ஒன்றிய இலக்கிய அணி செயலாளரான பொன்ராஜ் என்பவரிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கு, பொன்ராஜ் ரூ.30 ஆயிரம் பணம் கொடுத்தால் வாங்கி தருகிறேன் என கூறியுள்ளார். இதை நம்பி ரூ. 30 ஆயிரம் பணத்தைச் வண்டி தேவன் கொடுத்துள்ளார்.

போலியாக அரசு முத்திரைகள் தயாரித்து மோசடி செய்த அ.தி.மு.க நிர்வாகி.. 5 பேரை அதிரடியாக கைது செய்த போலிஸ்!

பின்பு வண்டி தேவனிடம் தூத்துக்குடி புஷ்பா நகரைச் சேர்ந்த அசோகன் என்பவரிடம் பொன்ராஜ் அறிமுகம் செய்து வைத்துள்ளார். அவர் புதிய பத்திரம் ஒன்றைக் வண்டி தேவனிடம் கொடுத்துள்ளார்.

அந்தப் பத்திரத்தை ஓட்டப்பிடாரம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் சென்று சரிபார்த்துள்ளார் வண்டி தேவன். அப்போதுதான் அந்த பத்திரத்தில் போலி கையெழுத்து மற்றும் போலி முத்திரைகள் இருந்தது தெரியவந்தது. இது குறித்து வண்டி தேவன் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலியாக அரசு முத்திரைகள் தயாரித்து மோசடி செய்த அ.தி.மு.க நிர்வாகி.. 5 பேரை அதிரடியாக கைது செய்த போலிஸ்!

இதில், அ.தி.மு.க நிர்வாகி பொன்ராஜ் மற்றும் அசோகன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல் போலியாக பத்திரங்கள் தயாரித்து மோசடி செய்து வந்தது தெரிந்தது. இதையடுத்து போலிஸார் அசோகன் நடத்தி வந்த கடையில் சோதனை செய்தனர்.

அப்போது, அரசு முத்திரையுடன் 80க்கும் மேற்பட்ட ரப்பர் ஸ்டாம்ப்புகள் மற்றும் மூட்டை மூட்டையாக ஆவணப் பத்திரங்கள் இருந்ததை கண்டு போலிஸார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அனைத்தையும் போலிஸார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து பொன்ராஜ், அசோகன், கிறிஸ்டோபர், இம்மானுவேல், காளீஸ்வரன் ஆகிய ஐந்து பேரையும் போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அ.தி.மு.க நிர்வாகி போலியாக அரசு முத்திரைகள் தயாரித்து மோசடியில் ஈடுபட்டு வந்தது தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

banner

Related Stories

Related Stories