தமிழ்நாடு

பைக் மீது மோதிய லாரி.. திருமணமான ஆறு மாதத்தில் புதிய தம்பதிக்கு நடந்த துயரம்!

திருச்சி அருகே சாலை விபத்தில் புதிய தம்பதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பைக் மீது மோதிய லாரி.. திருமணமான ஆறு மாதத்தில் புதிய தம்பதிக்கு நடந்த துயரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருச்சி மாவட்டம் சாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகள் ராகினி. இவருக்குப் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவருடன் கடந்த ஆகஸ்ட் மாதம் பெரியவர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், இந்த தம்பதி பெரம்பலூரில் இருந்து திருச்சிக்கு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அங்க ராகினியின் கிராமத்தில் நடைபெற்ற கிடா வெட்டு திருவிழாவில் கலந்து கொண்டனர்.

பைக் மீது மோதிய லாரி.. திருமணமான ஆறு மாதத்தில் புதிய தம்பதிக்கு நடந்த துயரம்!

பிறகு விருந்து முடித்து விட்டு இருவரும் பெரம்பலூர் நோக்கிச் சென்றுள்ளனர். இவர்கள் திருச்சி நெம்பர் 1 டோல்கேட் அருகே சென்றபோது, திருச்சியில் இருந்து அரியலுர் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி ஒன்று இவர்கள் வாகனத்தின் மீது மோதியுள்ளது.

இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் இருவரது உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர்.

பைக் மீது மோதிய லாரி.. திருமணமான ஆறு மாதத்தில் புதிய தம்பதிக்கு நடந்த துயரம்!

இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் பிரபாகரனை போலிஸார் கைது செய்தனர். சாலை விபத்தில் புதிய தம்பதி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories