தமிழ்நாடு

எமர்ஜென்சி என்ற அடக்குமுறைக்கு எதிரான யுத்தத்தில் இளஞ்சூரியனாய் உதித்தவர் மு.க.ஸ்டாலின்: சிறப்பு கட்டுரை!

‘மிசா’ சிறை வாழ்க்கை ஒரு தலைவனின் அரசியல் பயணத்திற்குச் சரியான பாதை அமைத்துத் தந்தது. துன்பங்களைத் துச்செமெனக் கருதுகின்ற மனப்போக்கு , பொறுமை, சகிப்புத்தன்மை ஆகிய நற்குணங்கள் அவரிடம் புகுந்தன.

எமர்ஜென்சி என்ற அடக்குமுறைக்கு எதிரான யுத்தத்தில் இளஞ்சூரியனாய் உதித்தவர் மு.க.ஸ்டாலின்: சிறப்பு கட்டுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நிறவெறிக்கு எதிரான போராட்டம் ஒரு மகாத்மா காந்தியை உருவாக்கியது.

மேல் சாதியினரின் தீண்டாமை ஒரு பெரியாரை சமூகப் போராளியாக உருவாக்கியது.

இனத்தின்மீதும் விழுந்த அடி பேரறிஞர் அண்ணாவை உருவாக்கியது. தாய்மொழி தமிழைக் காக்க போராளியாக உருவானார் முத்தமிழறிஞர் கலைஞர்.

எமர்ஜென்சி என்ற அடக்குமுறைக்கு எதிரான யுத்தத்தில் இளஞ்சூரியனாய் உதித்தவர் தலைவர் மு.க.ஸ்டாலின்.

இந்திய அரசியலின் இருண்ட காலமாக, சிவப்புக் கறை படிந்த ரத்த பக்கங்களாக எமர்ஜென்சி என்ற மிசா சட்டம் பிறப்பிக்கப்பட்ட 1975 ஆம் ஆண்டு விளங்கியது.

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மாநில அரசுகளின் செயலாட்சிகள் தள்ளிவைக்கப்பட்டன. இந்திய அரசியலைமைப்பு சட்ட விதி 352 ஐ கொணர்வது மூலம், இந்திரா காந்தி தனக்கென கூடுதலான சிறப்பு அதிகாரங்களைப் பெற்றார். மற்றும் குடியுரிமைகளை முடக்கினார்.

அரசு எந்திரம் தவறாக பயன்படுத்தப்பட்டது. பல்லாயிரக்கணக்கானோர் நாடுமுழுவதும் காவல் துறையினரால் கைது செய்யபட்டனர். இந்த நெருக்கடி நிலை காலகட்டத்தில் எதிர்க்கட்சிகள் கடுமையாக ஒடுக்கப்பட்டன. எதிர்க்குரல்கள் நசுக்கப்பட்டன. பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்பட்டது.

நெருக்கடி நிலையை எதிர்த்து காந்திய சோசலிசவாதியான ஜெய பிரகாஷ் நாராயண் பெரும் கிளர்ச்சியை பீகாரில் நடத்தினார். பல்லாயிரக்கணக்கானோர் நாடுமுழுவதும் காவல் துறையினரால் கைது செய்யபட்டனர். தேசிய அளவில் முக்கிய அரசியல் தலைவர்களான ஜெயப் பிரகாஷ் நாராயண், ராஜ் நாராயண், மொரார்ஜி தேசாய், சரண் சிங், ஜிவத்ராம் கிருபாலனி, அடல் பிகாரி வாஜ்பாய், எல்.கே.அத்வானி, பொதுவுடமைக் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோரும் பல கிளர்ச்சியாளர்களும் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தலைமையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் தமிழ்நாட்டிற்கு இரண்டு தூதுவர்களை முதல்வர் கலைஞர் அவர்களைச் சந்திக்க அனுப்பி வைத்தார். வந்த தூதுவர்கள் தலைவர் கலைஞர் அவர்களைச் சந்தித்து ஒரு செய்தியைச் சொன்னார்கள்.

எமர்ஜென்சி என்ற அடக்குமுறைக்கு எதிரான யுத்தத்தில் இளஞ்சூரியனாய் உதித்தவர் மு.க.ஸ்டாலின்: சிறப்பு கட்டுரை!

அது என்ன என்று கேட்டால், “நீங்கள் நெருக்கடி நிலையை ஆதரிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் எதிர்க்கக்கூடாது. எதிர்த்தால் தமிழகத்திலே உங்கள் தலைமையில் நடைபெறக்கூடிய ஆட்சியை உடனடியாகக் கவிழ்ப்போம்” என்று மிரட்டினார்கள்.

அப்போது தலைவர் கலைஞர் அவர்கள் சிரித்துக் கொண்டே தெளிவாகச் சொன்னார்கள்; “நான் தந்தை பெரியாராலும், பேரறிஞர் பெருந்தகை அண்ணாவாலும் உருவாக்கப்பட்டவன். பனங்காட்டு நரி. இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சிட மாட்டேன். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக்கக் கூடியவர்கள் நாங்கள். எந்தச் சூழ்நிலையிலும் சர்வாதிகாரத்திற்கு நாங்கள் துணைபோக மாட்டோம். ஆட்சியல்ல; என் உயிரே போனாலும் இதிலிருந்து பின் வாங்க மாட்டேன்” என்று கூறி தலைவர் கலைஞர் அவர்கள், டெல்லியில் இருந்து வந்த தூதுவர்களை அனுப்பி வைத்தார்கள்.

நெருக்கடி நிலை முற்றுகிறது. பெருந்தலைவர் காமராஜர் அவர்களை, படுத்த படுக்கையில் வீட்டிலே ஓய்வெடுத்துக் கொண்டிருந்த காமராஜர் அவர்களை, தலைவர் கலைஞர் அவர்கள் நேரடியாகப் போய் சந்தித்து; ஏற்பட்டிருக்கக் கூடிய சூழ்நிலையைப் பற்றி பேசிக் கொண்டிருந்த நேரத்தில், “இந்த சர்வாதிகாரத்தைக் கண்டித்து தி.மு.க., ஆட்சியிலிருந்து விலகிக் கொள்ளலாமா?’’ என்று கேட்க, அதற்குப் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் கலைஞரின் கையைப் பிடித்துக் கொண்டு; "தேசம் போச்சு, தேசம் போச்சு, இந்தியாவிலே இன்றைக்கு தமிழ்நாட்டில் மட்டும் தான் ஜனநாயகம் என்கிற சுதந்திரத்தை சுவாசிக்க முடிகிறது. எனவே நீங்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் ராஜினாமா செய்யக் கூடாது’’ என்று தெளிவாகச் சொன்னார்கள்.

எமர்ஜென்சி என்ற அடக்குமுறைக்கு எதிரான யுத்தத்தில் இளஞ்சூரியனாய் உதித்தவர் மு.க.ஸ்டாலின்: சிறப்பு கட்டுரை!

எமர்ஜென்சி என்ற அடக்குமுறைக்கு அஞ்சாத சிங்கமாக மாநில உரிமை காக்க, சென்னை கடற்கரையிலே லட்சக்கணக்கான மக்களை ஒன்று திரட்டி, ஒரு மாபெரும் கூட்டத்தைக் கூட்டி அந்தக் கூட்டத்திலே தி.மு.கழகம் சார்பில் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார்; “அதை நானே முன்மொழிகிறேன்” என்று முன் மொழிந்தார். அது என்ன தீர்மானம் என்று கேட்டால்; “அம்மையார் இந்திராகாந்தி அவர்களே, நீங்கள் கொண்டு வந்திருக்கிற நெருக்கடி நிலையை, அவசர நிலையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அதுமட்டுமல்ல, சிறையில் அடைத்து வைத் திருக்கிற தலைவர்களை எல்லாம் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” என்ற தீர்மானம் அது.

அதனை தலைவர் கலைஞர் அவர்கள் முன் மொழிய அங்கே கூட்டத்தில் கூடியிருந்த தமிழ்ப் பெருங்குடி மக்கள் அத்தனைபேரும், எழுந்து நின்று அதனை வழிமொழிந்தார்கள். அந்தத் தீர்மானம் அந்தக் கூட்டத்திலே நிறைவேற்றப்பட்டது.

இதன்தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில் முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருந்த தி.மு.க. ஆட்சி கவிழ்க்கப்படுகிறது. கவிழ்க்கப்பட்ட அடுத்த நிமிடம், காவல்துறை அதிகாரிகள் கலைஞரின் இல்லத்திற்கு வருகிறார்கள். இல்லத்திற்கு அவர்கள் வந்தபோது, தலைவர் கலைஞரைத் தான் கைது செய்ய வருகிறார்கள் என்று எல்லோரும் நினைத்தார்கள்.

எமர்ஜென்சி என்ற அடக்குமுறைக்கு எதிரான யுத்தத்தில் இளஞ்சூரியனாய் உதித்தவர் மு.க.ஸ்டாலின்: சிறப்பு கட்டுரை!

“என்ன விசேஷம்? நான் கைதாக வேண்டுமா?” எனக் கேட்கிறார் கலைஞர்.

“இல்லை.. உங்களை இல்லை” என ஒரு அதிகாரி சொல்கிறார்.

“யாரை கைது செய்ய வேண்டும்? என அதிர்ச்சியுடன் கேட்கிறார் கலைஞர்.

“உங்கள் மகன் ஸ்டாலினை’‘ என்று கூறினார்கள் அதிகாரிகள்.

“அவன் ஊரில் இல்லையே.. நாளை மாலை வருவான்“ என்றவரிடம், “வீட்டில் இருக்கிறாரா? என்று சர்ச் செய்து பார்க்கும் படி உத்திரவு’‘ என்கிறார்கள்.

“தாராளமாகச் சர்ச் செய்யுங்கள்“ என்கிறார் கலைஞர். போலிஸார் கடமையைச் செய்தார்கள். வீட்டில் மு.க.ஸ்டாலின் இல்லை.

தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த ஒருவர், பதவியை இழந்த அடுத்த ஓரிரு மணிநேரத்திலேயே அனுபவித்த கொடுமை இது. மகனை கைது செய்ய வந்த போலிஸ். வீட்டை சல்லடைப்போட்டு சோதனை செய்த நிலை ஆகியவற்றை தமிழர்களுக்காக பாடுபட்ட தலைவர் கலைஞர் அனுபவித்த சோதனைகள் என்று தானே சொல்லவேண்டும்!

மறுநாள் பொழுது விடிந்தது. மதுராந்தகம் பிரசார நாடகத்தில் பங்கேற்று வீடு திரும்பினார் மு.க.ஸ்டாலின். திருமணமாகி ஐந்து மாதங்களே ஆன அவரது மனைவி துர்கா துடித்தார். கணவரை போலிஸார் கைது செய்ய காத்திருந்த போது எந்த மனைவி துடிக்காமல் போவார்?

துணிந்தவனுக்கு தூக்குமேடை பஞ்சுமெத்தை என்பது வசனமட்டுமல்ல... வாழ்க்கைக்கான வாசகமாகவே கடைபிடித்த முத்தமிழறிஞர் கலைஞர், தன் மகனை சிறைக்கோட்ட பயணத்திற்கு தயாராக இருக்கும்படி கூறினார்.

எமர்ஜென்சி என்ற அடக்குமுறைக்கு எதிரான யுத்தத்தில் இளஞ்சூரியனாய் உதித்தவர் மு.க.ஸ்டாலின்: சிறப்பு கட்டுரை!

புலிக்கு பிறந்தது பூனையாகுமா? இடர் எதுவாக இருந்தாலும் இனத்திற்காக எதிர்கொள்ள, அடக்குமுறைக்கு முகம் கொடுக்க தயாரானார் இளஞ்சூரியன் மு.க.ஸ்டாலின். கர்ப்பவதியான தன்னுடைய மனைவியிடம், பத்துமாதம் கருவில் சுமந்த அன்னையிடமும், ஆசானாக விளங்கிய தந்தையிடமும் விடைபெற்ற தருணத்தில் போலிஸார் வந்தனர். கலைஞர் வழியனுப்பி வைத்தார். போலிஸ் வேனில் தமையன், கையசைக்கிறார் தந்தை.

‘போய் வா மகனே... களம் உனக்காக காத்திருக்கிறது’ என்று வழியனுப்பும் போது, எல்லோருடைய இதயமும் குலுங்கியது. விழிகள் குளமாயின.

தன் மகன் மட்டுமா? தரணி காக்க எத்தனை கழக உடன்பிறப்புக்களின் பிள்ளைகளை ‘மிசா’ கொடுஞ்சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என மனதை தேற்றிக் கொண்டார் தலைவர் கலைஞர்.

பத்திரிகைளுக்கு கொடுந்தணிக்கை நடந்த கொடுங்காலம் அது. வாய்ப்பூட்டுச் சட்டத்தினால், எழுத்துரிமை பறிக்கப்பட்ட பொழுதில் ‘முரசொலி’ என்ற போர்வாளை வெற்றுக் காகிதமாகவா தொண்டர்களுக்கு அளிப்பது?

மிசாவில் கைது செய்யப்பட்டோர் யார்? யார்? என்ற நிலவரத்தை கழகத்தினர் அறிந்துகொள்ள வேண்டாமா? . ஆனால், பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளதே... என்ன செய்வது ? என்ற யோசித்த வேளையில் தான் கலைஞரின் ராஜதந்திரம் வெளிப்பட்டது.

அப்போது கலைஞரின் ஆட்சி கலைக்கப்பட்டு இரண்டொரு நாள்தான் ஆனது. பிப்ரவரி 3ம் தேதி. அதுதான் பேரரறிஞர் அண்ணாவின் நினைவுநாள். அண்ணா சதுக்கம் சென்று வழக்கம்போல் கழகத்தினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நாள்.

“அண்ணா சதுக்கத்திற்கு மலர் வளையம் வைக்க வர இயலாதோர் பட்டியல்” என்று முரசொலியில் செய்தி வெளியிட்டு, மிசாவில் கைதானோர் யார் என்பதை நாட்டுக்கு அறிவித்து, பத்திரிகை தணிக்கை அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவி மிசா தியாகிகளை நாட்டிற்கு அடையாளம் காட்டினார் முத்தமிழறிஞர் கலைஞர்.

எமர்ஜென்சி என்ற அடக்குமுறைக்கு எதிரான யுத்தத்தில் இளஞ்சூரியனாய் உதித்தவர் மு.க.ஸ்டாலின்: சிறப்பு கட்டுரை!

அதன்படி சென்னை மாவட்டத்தில், நீலநாராயணன், நா.வீராசாமி, ஏ.வி.பி.ஆசைத்தம்பி, முரசொலி மாறன், சிட்டிபாபு, சீத்தாபதி, அ.செல்வராசன், டி.ஆர்.பாலு, மு.க.ஸ்டாலின், புலவர் பொன்னி வளவன், மைனர் மோசஸ், சா.கணேசன், சோ.மா.ராமச்சந்திரன் வழக்கடை ஜெயராமன், உசேன் என பட்டியல் விரிகிறது.

செங்கற்பட்டு, வடஆற்காடு, நெல்லை, மதுரை என அத்தனை மாவட்டங்களில் கைது செய்யப்பட்ட மறவர் கூட்டத்தினரின் பட்டியல் பட்டிதொட்டி எங்கும் ’முரசொலி’ மூலம் சென்றடைந்தது. ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட செயல்வீர்ர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

செயல்மறவர், கழகத்தின் கொள்கைப்பரப்புச் செயலாளர் சிட்டிபாபு சிறையில் கொடுமைகளை அனுபவித்தார். அவர் சிறையில் ஒரு டைரி எழுதினார். அந்த சிறைக்குறிப்புகளை படிப்பவர் கண்களில் ரத்தக் கண்ணீர் வடியும். அரசு பயங்கரவாதம் என்பது எப்படி சாமானியனைக் கொடுமைப்படுத்தும் என்பதற்கு சிட்டிபாபு டைரி ரத்தசாட்சியாகும்.

இதோ சிட்டிபாபு தனது டைரிக்குறிப்பில் சிறைக்கொடுமையை இப்படி விவரிக்கிறார்.

கதவு திறந்தது. பலர் முன்னே செல்வது என்ற நிலை. காலம் கதவுகளை மூடப் போவதில்லை. அர்ச்சனைக்குக் கொண்டு வந்த அரசியல் மலர்கள் அல்லவா நாங்கள்? எனவே திரும்பிப் பார்த்தேன். தீர்மானமாக நானே கொட்டடியிலிருந்து வெளியே வந்தேன். என்னைப் பெயர் சொல்லி அழைத்தனர். எதிர்பார்த்த ஆள் அல்லவா நான்?

எனவே, ஒரு அடி எடுத்து வைப்பதற்குள் கன்னத்தில் வீழ்ந்த அறைகள். அடடா...

நிலைக்கண்ணாடி கல்பட்டு உடைந்து விழுந்ததுபோல எனக்குத் தோன்றியது. கண்கள் கணநேரம் காண்பதெல்லாம் காரிருள் போல் இருந்தது.

இரு கோடுகளுக்கு இடையில் தள்ளப்பட்ட எலி, ஆம். அவர்கள் அடித்ததும் அப்படித்தான். அவர்கள் அசந்தனர். நான் எலி அல்ல புலி என்பது அவர்களுக்குப் புரிந்திருக்கும். காரணம் அத்தனை அடிக்கும் நான் கீழே விழவில்லை. அவர்கள் என்னைப் பிடித்துத் தள்ளினார்கள். மதில் சுவர் மீது சட்டெனத் திரும்பிக் கொண்டேன்.

ஒரு காவலன் வயிற்றில் எட்டி உதைத்து விட்டான். சுவரின் மீது சாய்ந்து கீழே உட்கார நினைத்தேன். ஆனால் நீண்ட நெடுமரத்தை ஒரு மதயானை இடக்காலாலும் வலக்காலாலும் துதிக்கையாலும் வெறிபிடித்து உதைப்பது போல் என்னை உதைத்தனர்.

அதே சித்ரவதைக்கு ஆளான ஆற்காடு வீராசாமி அப்படியே தரையில் நெடுமரமாகச் சாய்ந்துக் கிடந்தார். பேச்சும் மூச்சும் நின்று போனதா? ஆம். நினைவு இழந்திருந்தார்.

அருகே என் அன்புத் தம்பி, ஆமாம். ஸ்டாலின்தான். தமிழகத்து முதலமைச்சரின் மகன் என்று நேற்றுவரை அறியப்பட்டவர். சுருளிராஜன் என்ற காவலன் அவனது முகத்தில் எட்டி உதைத்தான். தம்பியின் அழகிய முகத்தை அவன் சுவைத்துப் பார்க்க ஆசைப்பட்டிருக்கிறான். அடுத்து ஒரு கொலைகாரன் லத்திக் கம்பால் ஸ்டாலினின் தோள்பட்டையைத் தாக்கினான். காக்கி உடை அணிந்த வார்டன் ஒருவன் தம்பியின் கன்னத்தில் அறைந்தான்.

இந்த சண்டாளர்கள் தம்பியை அடித்தே கொன்று விடுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டது. மற்றவர்களோ மண்ணுடன் சாய்ந்துக் கிடந்தார்கள். அவர்கள் தம்பிக்கு உதவுவதற்கு எழவும் முடியாது. அப்படி எழ முடிந்தாலும் அவர்களை அருகில் நிற்க எமகாதகர்கள் அனுமதிக்க மாட்டார்கள். என்ன செய்வது? எனக்கு ஒரு துணிச்சல் பிறந்தது. திடீர் என்று குறுக்கே பாய்ந்தேன். தம்பி ஸ்டாலினை அறைக்குள் தள்ளிவிட்டேன். என் கழுத்தின் மீது சராமரியாக அடிகள் விழுந்தன. தம்பி ஸ்டாலின் தான்பட்ட அடிகளை மறந்துவிட்டான். நெடுமரமாய் வீழ்ந்துவிட்ட எங்களை அவன் முழுமையாக அறைக்குள் அழைத்துச் சென்றான்.

அப்போது தம்பி எப்போதும் தோளில் ஓர் துண்டு போட்டிருக்கும். சிறைப்பாவிகள் அதனை மட்டும் விட்டு வைத்திருந்தார்கள். அந்த துண்டைத் தம்பி அறைக்குள்ளே விரித்தார். தாக்கப்பட்டவர்களைத் தாங்கிப் படுக்க வைத்தார்.

நான் சிறைக் கொட்டடிக் கதவிற்கு வெளியேதான் கிடந்தேன். ஒரு காவலன் என்னை சற்றுத் தூக்கினான். “வாடா தம்பி வா” என்று குத்துவிட்டான். கொட்டடிக்குள்ளே சுருண்டு விழுந்தேன். கொடிய காற்றில் நெடிய மரம் சாய்ந்து விழுவது போல் விழுந்தேன். இல்லை தள்ளப்பட்டேன். அப்போது எனக்கு முழுநினைவு இல்லை.

இதுதான் இரக்கமற்ற மிசா கொடுமைகளை தானும், தலைவரின் மகனான மு.கஸ்டாலின் உள்ளிட்டோரும் அனுபவித்ததை தனது டைரியில் ரத்தத்துளிகளால் சிட்டிபாபு எழுதியவை.

சிறை அதிகாரி, சிறை சூப்பிரன்டெண்ட் என்று சொல்லக்கூடிய கண்காணிப்பாளர் வித்யாசாகர் கொடுமையின் உச்சத்திற்கே சென்றார். மிசா கைதிகளை எப்படி எல்லாம் கொடுமைப்படுத்தினார் தெரியுமா? அதுவும் யாரை வைத்து என்று கேட்டால், சிறையிலிருக்கக்கூடிய ஆயுள் கைதிகளை வைத்து வெறியாட்டத்தை நடத்தினார்.

ஒரு கொலையைச் செய்து விட்டு அந்தக் கொலைக்கான தண்டனை, அந்தக் குற்றத்திற்கான தண்டனை பெற்றவர்கள், ஆயுள் முழுவதும் சிறையிலே கழிக்க வேண்டும். பிறகு அவர்களின் நன்னடத்தையைக் கருத்தில் கொண்டு 20 வருடம் அல்லது 30 வருடம் கழித்து அவர்களை விடுதலை செய்வார்கள். அப்படிப்பட்டவர்களைக் கொண்டு மிசா கைதிகளை தடியடியால் தாக்கக்கூடிய அந்தக் கொடுமையான சம்பவங்களை எல்லாம் நடத்தினார்கள்.

அப்போது முக்கியமாக எதைக் கையாண்டார்கள் என்று கேட்டால், "தி.மு.க.விலிருந்து விலகி விட்டோம், எங்களுக்கும் தி.மு.க.விற்கும் சம்மந்தம் இல்லை. என்று எழுதிக் கொடுக்க வேண்டும், கையெழுத்துப் போட வேண்டும்” என்று மிரட்டினார்கள். ஆனால் அந்த மிரட்டல், அச்சுறுத்தலுக்கு எல்லாம் அஞ்சுவார்களா கலைஞரின் தம்பிகள்!

சிட்டிபாபுவுடன்...

சிட்டிபாபுவுடன்...

தம் வாழ்நாளில் இவ்வளவு கொடுஞ்சித்ரவதைகள் பற்றி யாருமே கேள்விபட்டிருக்க மாட்டார்கள். சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கழகத்தின் தூண்களை வெட்டிச் சாய்ப்பது , கழகத்தை ஒழிப்பது என்ற பயங்கர திட்டத்தை உருவாக்கினார்கள் ஆட்சியாளர்கள். ஆனால், கழகத் தோழர்கள் உறுதியாக இருந்தார்கள்.

உணவு வேளைகளில் சிறைக் கொட்டடிகள் திறக்கப்பட்டன. அப்போது முரசொலி மாறன், ஸ்டாலின், சிட்டிபாபு, நீல நாராயணன், சிட்டிபாபு சந்தித்து பேசுவார்கள். எக்காரணம் கொண்டும் மன்னிப்புக் கடிதம் எழுதித்தரப் போவதில்லை என்ற உறுதியின் முன்னணியில் இருந்தார் மு.க.ஸ்டாலின்.

சிறை அதிகாரி சொல்கிறார். “ ஒரே ஒரு கையெழுத்துப் போட்டுக் கொடுத்தால் போதும். விடுதலை செய்கிறேன்”

“முடியாது” மு.க.ஸ்டாலின் மறுக்கிறார்.

“நீ அடிபட்டே சாகக் போகிறாய்” இது மிரட்டல்.

“இளம் வயதில் ஏன் வாழ்க்கையை நரகமாக்கிக் கொள்கிறாய்?”

இப்படியெல்லாம் மிரட்டல்கள். யானையை அடக்கலாம். ஆனால், லட்சிய உணர்வு கொண்ட மனிதனைத் தீண்ட முடியுமா?. லட்சிய மனிதன் மு.க.ஸ்டாலின்.

எண்ணிப்பாருங்கள். திருமணம் முடித்து ஐந்தாவது மாதம் சிறைவாசம் கண்டுவிட்டார். சித்ரவதைகளை அனுபவித்து விட்டார். ஆனாலும், மன்னிப்பு கடிதத்தில் கையெழுத்துப் போட்டு விட்டு சிறை மீள அவர் விரும்பவில்லை. எப்போது அரசே விடுதலை செய்கிறதோ அப்போது சிறைக்கதவுகளை விட்டு வெளியேறுவது என்ற உறுதியுடன் அவர் இருந்தார்.

எமர்ஜென்சி என்ற அடக்குமுறைக்கு எதிரான யுத்தத்தில் இளஞ்சூரியனாய் உதித்தவர் மு.க.ஸ்டாலின்: சிறப்பு கட்டுரை!

“அழுது புலம்புவதற்காக நாம் சிறைக்கு வரவில்லை. நமது லட்சியப் பயணத்தில் இன்னொரு நெருப்பாற்றை நீந்துவதற்காக வந்திருக்கிறோம். அந்த அக்கினிப் பிரவாகத்தையும் வெகு விரைவில் கடந்து விடுவோம். அதுவரை பொறுமையாக இருங்கள்” என்று அவர் கூறிய நிலையில் இருந்தே கழகத்தினை வழிநடத்திட தன்னிகரில்லா தலைவன் கிடைத்துவிட்டான் என்று கழகத் தோழர்கள் உணர்ந்தார்கள். மாணவனாக சிறைக்குச் சென்றவர் இப்போது ஆசானாகி விட்டார். ஆம். தலைவர் மு.க.ஸ்டாலின் மிசாவின் வார்ப்பு.

சகிப்புத்தன்மை கொண்ட நெஞ்சுரத்தை தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அளித்தது மிசா சிறைவாசம். சிறைச்சாலையில் அவருக்கு கொடுக்கப்பட்ட உணவில் அளவுக்கு அதிகமாக உப்பைக் கொட்டி, அதில் வேப்பெண்ணெயை ஊற்றி இருந்தார்கள். அவர் அதை எப்படிச்சாப்பிட்டார் என்று சக தோழர்களுக்கு ஆச்சர்யம். மற்றவர்களிடம் கேட்டார்கள். உப்புக்கொட்டப்பட்ட உணவை தண்ணீர் ஊற்றிக் கழுவிச் சாப்பிட்டார் என்ற செய்தியை கனத்த இதயத்தோடு ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்.

ஒரு தலைவனை மிசா சிறைச்சாலை உருவாக்கிவிட்டது. எப்படித்தெரியுமா? தொண்டனின் துயரைத் தாங்கும் போது. ஆம். அடியார் என்ற தொண்டரை சிறைக்குள் அடித்துப் போட்டார்கள். மல்யுத்த வீரனைப் போன்ற உடற்கட்டு உடையவர் அடியோடு பிடுங்கி எறியப்பட்ட ஆலமரம் போன்று விழுந்து கிடந்தார்.

உணவுக்காக சிறைக்கதவு திறந்தபோது, ஓடோடி வந்து அடியாரை தொட்டுத்தூக்கி ஆறுதல் சொன்னார் மு.க.ஸ்டாலின். தொண்டர்களின் ஒவ்வொரு துன்ப துயரங்களில் பங்குகொள்ளும் மகத்தான மனநிலையை , தலைவன் என்ற உன்னத நிலையை அப்போது அவர் அடைந்தார். சிறைக்கொடுமைகளுக்காக அவர் மருண்டு போகவில்லை.

வலிமை உடல் அளவில் வருவதில்லை. உள்ள உறுதியில்தான் வலிமை சேர்க்கும். அந்த வலிமையை ஓராண்டு கால மிசா கொடுஞ்சிறை வாழ்க்கை தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அளித்தது என்றால் அதுவே உண்மை.

மிசா கொடுமையின் ஒரு மாத நிறைவின் போதே, கழகத் தோழர்களை சந்திக்க முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கு அனுமதி கிடைத்தது. அவர்தம் மனைவி, மருமகளுடன் சிறைக்கு வருகிறார். முரசொலி மாறன் உள்ளிட்டோரை சந்தித்து விட்டு இறுதியாகத் தான் தன் மகன் மு.க.ஸ்டாலினை சந்திக்க வருகிறார்.

மு.க.ஸ்டாலினைச் சுற்றி இரண்டு சிறை அதிகாரிகள். நான்கு சி.ஐ.டி.,கள், முழுக்கைச் சட்டை போட்டு ஸ்டாலின் கையை மூடியிருந்தார். காரணம் அடிப்பட்ட காயங்கள் தெரியக்கூடாது என்பதற்காக சிறை அதிகாரிகள் உத்தரவு அப்படி.

எமர்ஜென்சி என்ற அடக்குமுறைக்கு எதிரான யுத்தத்தில் இளஞ்சூரியனாய் உதித்தவர் மு.க.ஸ்டாலின்: சிறப்பு கட்டுரை!

“அடித்தார்களாமே. உண்மையா?” கலைஞர் கேட்கிறார்.

“இல்லை” என்பதுபோல் தலையாட்டினார் ஸ்டாலின். ஆனால், கண்கள் மின்னின. அவர் மட்டும் அடித்தார்கள் என்றுச் சொல்லியிருந்தால், அன்று மாலையே சிறைக்குள் இருந்த அனைவருக்கும் அடி விழுந்திருக்கும்.

சிறையில் சரியாக ஓர் ஆண்டுகாலம் இருந்தார் மு.க.ஸ்டாலின். சிறை வாழ்க்கை அவருடைய அரசியல் பயணத்திற்குச் சரியான பாதை அமைத்துத் தந்தது. துன்பங்களைத் துச்செமெனக் கருதுகின்ற மனப்போக்கு , பொறுமை, சகிப்புத்தன்மை ஆகிய நற்குணங்கள் அவரிடம் அடைக்கலம் புகுந்தன. தான் தலைவர் வீட்டுப்பிள்ளை என்ற நினைப்பு ஒருக்காலும் அவருக்கு தலை தூக்கியது இல்லை. சிறையில் சமானியர்களோடு சாதாரணமாக பழகினார். எளிமையே உயர்வு தரும் என்ற அண்ணாவின் பாடத்தை அவர் சிறையில் படித்து உணர்ந்தார்.

திட்டமிட்டு பணி செய்வது, காலத்தோடு கடமையாற்றுவது, காலந்தவறாது உதவுவது ஆகிய நற்பண்புகளை தந்தையிடம் இருந்துபெற்ற அவர் சிறைச்சாலையில் அதை செயல்படுத்திக் காட்டினார். பூட்டிய இரும்புக்கூட்டின் கதவுகள் திறந்தன. தொண்டனோடு தொண்டனாக கடைசியில் சிறையில் இருந்து விடுதலையானார் மு.க.ஸ்டாலின்.

மிசா கொடுஞ்சிறை தொண்டர்களின் தலைவனை உருவாக்கியது. அவரே இன்று மக்களின் தலைவராக திகழும் தலைவர் மு.க.ஸ்டாலின்!.

Related Stories

Related Stories