தமிழ்நாடு

லண்டன் மாநாட்டிற்கு தேர்வானதாகக் கூறி ரூ.5 லட்சம் சுருட்டிய குஜராத் இளைஞர் - போலிஸில் சிக்கியது எப்படி ?

லண்டன் மாநாட்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக பேராசிரியரிடம் ரூ.5 லட்சம் பண மோசடி செய்த குஜராத் வாலிபரை புதுச்சேரி போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

லண்டன் மாநாட்டிற்கு தேர்வானதாகக் கூறி ரூ.5 லட்சம் சுருட்டிய குஜராத் இளைஞர் - போலிஸில் சிக்கியது எப்படி ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

புதுச்சேரி திருவட்டக்குடி என்.ஐ.டி வளாகம் பேராசிரியர் குடியிருப்பை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் கல்லூரி ஒன்றில் இணை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு செல்போன் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர், தன்னை ஐக்கிய நாடுகள் ஆணையத்தின் மாநாட்டு ஏற்பாட்டு குழு அமைப்பாளர் என அறிமுகம் செய்துள்ளார்.

பின்னர் லண்டனில் நடைபெற உள்ள நிலையான வளர்ச்சி இலக்குகள் சம்பந்தமான மாநாட்டில் பங்குகொள்ள பேராசிரியர் செந்தில்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் அதற்கான ஆணையை மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளார். தொடர்ந்து லண்டனில் தங்குவதற்காகவும், பயண செலவிற்காகவும் ரூபாய் 5 லட்சத்து 33 ஆயிரத்து 640 அனுப்ப வேண்டும் என்றும், அவருடன் ஒருவரை அழைத்து வரலாம் என்றும் கூறியுள்ளார்.

லண்டன் மாநாட்டிற்கு தேர்வானதாகக் கூறி ரூ.5 லட்சம் சுருட்டிய குஜராத் இளைஞர் - போலிஸில் சிக்கியது எப்படி ?

இதற்கு முன் பல வெளியூர்களில் நடைபெறும் மாநாடுகளில் செந்தில்குமார் கலந்துகொண்டு இருப்பதால் அதை உண்மை என்று நம்பியுள்ளார். மேலும் தொலைபேசியில் பேசிய நபர் கேட்ட பணத்தை அனுப்பியுள்ளார். தன்னுடைய விபரத்தையும் தன்னுடன் பணியாற்றும் பேராசிரியர் சங்கர் நாராயணன் என்பவர் விபரத்தையும் அனுப்பியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து செந்தில்குமாருக்கு விசா மற்றும் விமான பயண டிக்கெட் அனுப்பப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட நாளில் செந்தில்குமாரும் சங்கர நாராயணனும் சென்னை சென்றுள்ளனர். ஏர்போர்ட்டில் அந்த பயண டிக்கெட் போலியானது என்று தெரியவந்தது. இதனால் இருவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் விசாரணையில் விசா உள்ளிட்ட அனைத்துமே போலியானது என்று தெரிய வந்ததையடுத்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த செந்தில்குமார், உடனே இதுகுறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலிஸில் புகார் அளித்தார். சைபர் கிரைம் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நார சைதன்யா உத்தரவின் அடிப்படையில் தனிப்படையினர் குற்றவாளியை தேடி வந்தது.

லண்டன் மாநாட்டிற்கு தேர்வானதாகக் கூறி ரூ.5 லட்சம் சுருட்டிய குஜராத் இளைஞர் - போலிஸில் சிக்கியது எப்படி ?

அப்போது இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த யுவராஜ் சிங் பிங்கள் சாங்காவில் உள்ள வடிவிஸ்டாரில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. புதுச்சேரி போலிஸார் குஜராத் போலிஸார் உதவியுடன் மோசடி செய்தவரை கைது செய்து அழைத்து வந்து புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர் விசாரணைக்கு பின்னர் காலப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே குற்றவாளியை பிடித்த போலிஸார் குஜராத் ஜாம்நகர் சென்று அவன் பயன்படுத்திய செல்போன் சிம் கார்டு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் வங்கியில் அவன் வைத்திருந்த ரூ. 3,00,000/- பணம் வங்கி மூலம் மீட்கப்பட்டு நீதிமன்றம் மூலம் பாதிக்கப்பட்ட நபரான டாக்டர் செந்தில் குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.  

banner

Related Stories

Related Stories