தமிழ்நாடு

காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த மாமியார், இரண்டு மருமகன்கள் பலி !

திட்டுப்பாறை அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த மாமியார், இரண்டு மருமகன்கள் பலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்து திட்டுப்பாறையில் இன்று காலை நடந்த விபத்தில் மூன்று பேர் பலியாகினர். காங்கேயம் அய்யாசாமி காலனியில் குடியிருந்து கொண்டு மெடிக்கல் கடை நடத்திவருவபவர் விஸ்வநாதன் (35).

தனது சான்ட்ரோ காரில் விசேச நிகழ்விற்கு தனது உறவினர் மற்றும்  மாமியார் மணி (55) மற்றும் அவரது மகள் உமா, உமாவின் கணவர் ரமணன் ஆகியோர் சென்னிமலை உறவினர் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தனர்.

காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த மாமியார், இரண்டு மருமகன்கள் பலி !

அப்போது எதிரே வந்த சிமென்ட் லாரியில் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் நான்கு பேரும் காருக்குள் மாட்டிக் கொண்டனர். பின்னர் காங்கேயம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அனைவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்தவர்கள் விஸ்வநாதன் மற்றும் மணி ஆகியோர் வரும்வழியிலேயே இறந்துவிட்டதாகவும் ரமணன் மற்றும் அவரது மனைவி உமா ஆகியோர்களை மேல்சிகிச்சைக்கு கோவை அனுப்பிவைத்தனர்.

ஆனால் வழியிலேயே ரமணனும் பரிதாபமாக உயிரிழந்தார்.ஒரே குடும்பத்தை சேர்ந்த மாமியார் மற்றும் இரண்டு மருமகன்கள் உயிரிழந்தது காங்கேயம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து காங்கேயம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

banner

Related Stories

Related Stories