தமிழ்நாடு

114 கி.மீ வேகத்தில் பாய்ந்த பைக்.. கட்டுப்பாட்டை இழந்ததால் 2 மாணவர்களுக்கு சாலையில் நடந்த கொடூரம்!

சென்னையில், சாலை விபத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

114 கி.மீ வேகத்தில் பாய்ந்த பைக்..  கட்டுப்பாட்டை இழந்ததால் 2 மாணவர்களுக்கு சாலையில் நடந்த கொடூரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை அடுத்த தரமணி பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இளைஞரான இவர் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அதேபகுதியை பகுதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். இவர் வேளச்சேரியில் உள்ள பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இந்த இருவரும் நெருங்கிய நண்பர்கள்.

இந்நிலையில் கடந்த 26ம் தேதி நண்பர்கள் இருவரும் இரு தரமணி 100 அடி சாலையில் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றுள்ளனர். வாகனத்தை பிரவீன் ஓட்டியுள்ளார். பின்னால் ஹரிகிருஷ்ணன் இருந்துள்ளார்.

114 கி.மீ வேகத்தில் பாய்ந்த பைக்..  கட்டுப்பாட்டை இழந்ததால் 2 மாணவர்களுக்கு சாலையில் நடந்த கொடூரம்!

அப்போது ஹரிகிருஷ்ணன் செல்போனில் எவ்வளவு வேகத்தில் செல்கிறோம் என்பதை வீடியோ பதிவு செய்துள்ளார். அந்தநேரம் எஸ்.ஆர்.பி.டூல்ஸ் பகுதியிலிருந்து வந்த லோடு வேன் ஒன்று யூடர்ன் செய்துள்ளது.

இதனால், வேனில் இருசக்கர வாகனத்தை இடிக்காமல் இருக்க வாகனத்தின் வேகத்தை குறைத்துள்ளனர். ஆனால் கட்டுப்பாட்டை இழந்து இருவரும் கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போலிஸார் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

114 கி.மீ வேகத்தில் பாய்ந்த பைக்..  கட்டுப்பாட்டை இழந்ததால் 2 மாணவர்களுக்கு சாலையில் நடந்த கொடூரம்!

இதையடுத்து சிகிச்சையில் இருந்த பிரவீன் இன்றைய இரவே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதையடுத்து அடுத்தநாள் ஹரிகிருஷ்ணன் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து வேன் டிரைவர் குணசேகரனை கைது செய்துள்ளனர்.

மேலும் இந்த விபத்து குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் 114 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றதால் ஏற்பட்ட விபத்தில் பள்ளி கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

TTF வாசன் போன்றவர்கள் அதிவேகமாக இருசக்கர வாகனங்களை ஓட்டி அதை சமூகவலைதளங்களில் வெளியிடுகின்றனர். இதைப்பார்க்கும் இளைஞர்களும் தாங்களும் இதேபோன்று வாகனத்தை ஓட்டவேண்டும் என நினைக்கின்றனர்.

இதனால் இளைஞர்கள் அதிவேகமாக வாகனத்தை ஓட்டிப்பார்க்கும்போது இப்படி விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. எனவே TTF வாசன் போன்றவர்கள் அதிவேகமாக வாகனம் ஓட்டி செல்லும் வீடியோக்களை இணையத்தில் வெளியிடுவதை தவிர்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories