தமிழ்நாடு

விபத்தில் உயிரிழந்த மகன்.. சோகத்தில் பெற்றோர் எடுத்த விபரீத முடிவு: அதிர்ச்சியில் உறவினர்கள்!

கோவையில், சாலை விபத்தில் மகன் இறந்த துக்கத்தில் பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் உயிரிழந்த மகன்.. சோகத்தில் பெற்றோர் எடுத்த விபரீத முடிவு: அதிர்ச்சியில் உறவினர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கோவை மாவட்டம், நவாவூர் கணுவாய் ரோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சீவ் சங்கர். இவரது மனைவி நந்தினி. இந்த தம்பதிக்கு ரவி கிருஷ்ணா என்ற மகன் இருந்தார். கல்லூரியில் படித்து வந்த ரவி கிருஷ்ணா நண்பர்களுடன் சேர்ந்து ரிசார்டில் ஓணம் கொண்டாடியுள்ளார்.

விபத்தில் உயிரிழந்த மகன்.. சோகத்தில் பெற்றோர் எடுத்த விபரீத முடிவு: அதிர்ச்சியில் உறவினர்கள்!

பின்னர் நண்பர்களுடன் சேர்ந்து காரில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து தென்னமநல்லூர் சாலையின் அருகே இருந்த கிணற்றுக்குள் விழுந்தது. இதில் ரவி கிருஷ்ணா உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதையடுத்து மகன் இறந்த துக்கத்தில் பெற்றோர் சஞ்சீவ் சங்கர், நந்தினி ஆகியோர் கடும் மன அழுத்தத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் இரண்டு பேரும் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த மகன்.. சோகத்தில் பெற்றோர் எடுத்த விபரீத முடிவு: அதிர்ச்சியில் உறவினர்கள்!

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாணை நடத்தி வருகின்றனர். மகன் இறந்த துக்கத்தில் அவரது தந்தை மற்றும் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories