தமிழ்நாடு

கேஸ் குடோனில் திடீர் தீ விபத்து.. வெடித்து சிதறிய சிலிண்டர்கள் - 12 பேர் படுகாயம் : பகீர் சம்பவம்!

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுக்கா தேவரியம்பாக்கம் கிராமத்தில் தனியார் எரிவாயு சிலிண்டர் குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு 12பேர் காயம் அடைந்துள்ளனர்.

கேஸ் குடோனில் திடீர் தீ விபத்து.. வெடித்து சிதறிய சிலிண்டர்கள் - 12 பேர் படுகாயம் : பகீர் சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுக்கா தேவரியம்பாக்கம் கிராமத்தில் இயங்கி வரும் ஏ.எஸ்.என் கேஸ் ஏஜென்சி என்ற பெயரில் ஜீவாநந்தம் என்பவர் கேஸ் குடோன் நடத்தி வருகிறார். இந்த இந்த கேஸ் குடோனில் இருந்து ஒரகடம் சுற்றுவட்டார தொழிற்சாலைகளுக்கு வணிக ரீதியான கேஸ் சிலிண்டர் சப்ளை செய்யப்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் வீட்டின் அருகில் உள்ள கேஸ் குடோனில் திடீரென தீப்பிடித்தது தொடர்ந்து கேஸ் குடோனில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியுள்ளது. இதன் காரணமாக வீட்டின் அருகிலேயே இருந்த ஜீவானந்தம், பூஜா, சந்தியா, நிவேதா, கோகுல் மற்றும் லாரி ஓட்டுனர்கள் இரண்டு பேர் என மொத்தம் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து இவர்கள் அனைவரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். சம்பவ இடத்தில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர், நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர், வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர்.

மேலும் காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் ஆர்நிஷா பிரியதர்ஷினி தலைமையில் காஞ்சிபுரம் மறைமலைநகர் ஒரகடம் ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கேஸ் குடோனில் இருந்து கேஸ் வெளியேறி வருவதால் பகுதி முழுவதுமே மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories