தமிழ்நாடு

I Miss You அம்மா.. உருக்கமாகக் கடிதம் எழுதி விபரீத முடிவு எடுத்த மகன்: காரணம் என்ன?

சென்னையில், தாய்க்குக் கடிதம் எழுதி வைத்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

I Miss You அம்மா.. உருக்கமாகக் கடிதம் எழுதி விபரீத முடிவு எடுத்த மகன்: காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை அடுத்த அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் கலா. இவரது மகன்கள் வெங்கடேஷ், விஜய். இதில் விஜய் தனியார் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடையில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில், கமலா சம்பவத்தன்று வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. பல முறை தட்டியும் கதவு திறக்கப்படவில்லை.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றுபார்த்போது விஜய் தூக்கிட்ட நிலையில் சடலமாக இருந்ததைக் கண்டு கமலா அதிர்ச்சியடைந்தார். இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் விஜய் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தர்.

I Miss You அம்மா.. உருக்கமாகக் கடிதம் எழுதி விபரீத முடிவு எடுத்த மகன்: காரணம் என்ன?

மேலும் வீட்டில் போலிஸார் சோதனை செய்தபோது தற்கொலைக்கு முன்பு விஜய் எழுதி கடிதத்தை போலிஸார் கைப்பற்றியுள்ளனர். அதில் அம்மா, உன்னை நான் ரொம்ப மிஸ் பண்றேன் என உருக்கமாக எழுதியுள்ளதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.

I Miss You அம்மா.. உருக்கமாகக் கடிதம் எழுதி விபரீத முடிவு எடுத்த மகன்: காரணம் என்ன?

அதேபோல் வேலை செய்யும் இடத்தில் விஜய் ஒரு பொருளை எடுத்துவைத்துள்ளார். இதனை அறிந்த மேனேஜர் ஊழியர்கள் முன்னிலையில் விஜயை முட்டிபோட வைத்துள்ளார்.இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதுபோலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய்க்கு கடிதம் எழுதி வைத்து மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதிலிருந்து விடுபடுவதற்குத் தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.

banner

Related Stories

Related Stories