தமிழ்நாடு

பண மோசடி குறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்ட பெண் RJ : 24 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த கோவை போலிஸ்!

ரேடியோ சிட்டி FMல் வேலைபார்த்து வரும் RJ மரியா சமூக வலைதளத்தில் கொடுத்த புகாரில் 24 மணி நேரத்திற்குள் போலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பண மோசடி குறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்ட பெண் RJ : 24 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த கோவை போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கோவை விமான நிலையம் அருகே உள்ள ஜி.ஆர்.ஜி பகுதியைச் சேர்ந்தவர் மரிய பிரதீப். இவர் தனது மனைவியுடன் தனியார் பள்ளியில் படிக்கும் மகனை அழைப்பதற்காகப் பள்ளி அருகே காரில் காத்திருந்துள்ளார்.

அங்கு வந்த இரண்டு திருநங்கைகள், பிரதீப்பிடம் காசு கேட்டுள்ளனர். இவரும் பத்து ரூபாய் எடுத்து கொடுத்துள்ளார். அப்போது அவரது தலையில் ஆசீர்வாதம் செய்வதுபோல் நடித்து காரில் இருந்த பர்சை எடுத்துள்ளனர். மேலும் அதிலிருந்த ரூ. 10 ஆயிரத்தை நூதனமாகத் திருடிவிட்டு அங்கிருந்து இருவரும் சென்றுள்ளனர்.

இதையடுத்து பிரீதிப் எனது பர்சை பார்க்கும்போது அதிலிருந்த பணம் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மரியா பிரீதிப், ரேடியோ சிட்டி FMல் வேலைபார்த்து வரும் தனது தங்கை RJ மரியாவிடம் தெரிவித்துள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் தனது சமூகவலைதளத்தில் இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த கோவை காவல்துறையினர் உடனே இது தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்த விசாரணையில் மரிய பிரதீப்பிடம் பணத்தைத் திருடியது கவுண்டம்பாளையம் சக்தி நகரைச் சேர்ந்த இளம் வஞ்சி என்பது தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

பின்னர் RJ மரியா கோவை காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இப்படியான குற்றங்கள் நடக்கும்போது நாம் துணிந்து காவல்துறையிடம் புகார் கொடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories