தமிழ்நாடு

3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலிஸ்!

சென்னையில் 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலிஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை அடுத்த படப்பை ராகவேந்திரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மூன்றரை வயது மகள் அதே பகுதி ஞானாம்பாள் தெருவில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று மாலை பள்ளி முடித்து வீடு திரும்பிய சிறுமிக்கு உடலில் காயம் இருந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளிடம் நடந்தவற்றைக் கேட்டுள்ளனர்.

3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலிஸ்!

அப்போது சிறுமி, ஆசிரியர் ஒருவர் தன்னிடம் தவறான முறையில் நடந்தாக சிறுமி கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகார் குறித்து போலிஸார் விசாரணை நடத்தியதில் அதே பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வந்த தமிழரசு என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது.

3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலிஸ்!

இதையடுத்து போலிஸார்தமிழரசு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories