தமிழ்நாடு

100 பேர் Account -ல் திடீரென வந்த தலா ரூ.13 கோடி: தனியார் வங்கியில் நடந்தது என்ன?

சென்னை தி.நகர் எச்.டி.எப்.சி வாடிக்கையாளர்கள் 100 பேர் கணக்கில் ரூ.13 கோடி வரவு வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

100 பேர் Account -ல்  திடீரென வந்த தலா ரூ.13 கோடி: தனியார் வங்கியில் நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை தி.நகரில் HDFC வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் 100 பேருக்கு திடீரென தலா ரூ. 13 கோடி பணப் பரிமாற்றம் நடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் இது குறித்து வங்கி நிர்வாகத்திடம் கேட்டுள்ளனர்.

இதுபற்றி அறிந்த உடனே வங்கி நிர்வாகத்தினர் அந்த 100 பேரின் வங்கிக் கணக்குகளை தற்காலிகமாக முடக்கியுள்ளனர். மேலும் தொழில் நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த தவறு நடந்ததுள்ளதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. புதிய பென்பொளை அப்டேட் செய்தபோது வாடிக்கையாளர்கள் கணக்கிற்குப் பணம் பரிமாற்றம் நடந்துள்ளது என தெரியவருகிறது.

இது குறித்து மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தொழில்நுட்ப பிரச்சனையால் இந்த தவறு நடந்ததா? அல்லது வேறு காரணங்கள் இருக்கிறதா? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.

banner

Related Stories

Related Stories