தமிழ்நாடு

“அடிக்கிற வெயில்ல வைகைத்தண்ணி ஆவியாகிரும்.. சீக்கிரம் கெளம்புங்க”: செல்லூர் விஞ்ஞானியை கலாய்த்த அமைச்சர்!

“சித்திரை வெயிலில் வைகை நீர் ஆவியாகி விடாமல் தடுக்க, தெர்மோகோல் எடுத்துக் கொண்டு கிளம்புங்கள்.” என கிண்டல் செய்துள்ளார் அமைச்சர் செந்தில்பாலாஜி.

“அடிக்கிற வெயில்ல வைகைத்தண்ணி ஆவியாகிரும்.. சீக்கிரம் கெளம்புங்க”: செல்லூர் விஞ்ஞானியை கலாய்த்த அமைச்சர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“சித்திரை வெயிலில் வைகை நீர் ஆவியாகி விடாமல் தடுக்க, தெர்மோகோல் எடுத்துக் கொண்டு கிளம்புங்கள்.” என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவை கிண்டல் செய்துள்ளார் அமைச்சர் செந்தில்பாலாஜி.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் அனைத்துத் துறைகளின் முன்னேற்றத்திற்கும் சிறப்பான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், மின்சாரத்துறையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி. கோடை கால மின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.

கடந்த 6 மாதங்களுக்குள் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கி வரலாற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது. 11 மாத காலத்தில் 3,527 மெகா வாட் மின்சாரத்திற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

18 ஆயிரம் மெகா வாட் மின் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாநிலத்தின் சொந்த மின் உற்பத்தியை மேலும் பெருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், மின் தடை ஏற்படுவதாக பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர். அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவும் அந்த நோக்கில் கருத்து தெரிவித்திருந்தார்.

“அடிக்கிற வெயில்ல வைகைத்தண்ணி ஆவியாகிரும்.. சீக்கிரம் கெளம்புங்க”: செல்லூர் விஞ்ஞானியை கலாய்த்த அமைச்சர்!

அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, “தமிழ்நாட்டில் மின்தடை இல்லை எனத் தெரிந்து, ‘தடை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்கிறார் தெர்மோகோல் விஞ்ஞானி.

எங்கள் பணியை நாங்கள் சிறப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சித்திரை வெயிலில் வைகை நீர் ஆவியாகி விடாமல் தடுக்க, தெர்மோகோல் எடுத்துக் கொண்டு கிளம்புங்கள்.” என கிண்டல் செய்துள்ளார்.

banner

Related Stories

Related Stories