தமிழ்நாடு

24 மணி நேரம் அவகாசம்.. இல்லையெனில், அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் எச்சரிக்கை!

உண்மை நிலையைப் புரிந்து கொள்ளாமல் அல்லது புரிந்து கொள்ளக் கூடிய தன்மையில்லாமல் ஒருஅரை குறையாக இந்தத் திட்டங்கள் குறித்து விமர்சனங்களை முன்வைத்திருக்கின்றார்

24 மணி நேரம் அவகாசம்.. இல்லையெனில், அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி நேற்று முன்தினம் (16.3.2022) தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

எண்ணூர் அனல் மின்நிலையத்தினுடைய விரிவாக்கத் திட்டம் குறித்து தமிழகத்தின் பாரதிய ஜனதா கட்சியினுடைய மாநிலத் தலைவர் பத்திரிகையாளர் சந்திப்பில் பல்வேறு கருத்துக்களை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். தனிப்பட்ட நபருக்கான விளக்கம் என்பதை விட ஒரு அரசியல் இயக்கத்தினுடைய மாநிலத் தலைவர் என்ற முறையில் தமிழக அரசு இந்தத்திட்டங்கள் குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் புரிதல் இல்லாமல் ஒரு அரசியல் கட்சியினுடைய மாநிலத் தலைவர் பொது வெளியில் ஒரு அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தக் கூடிய வகையில் இந்தத் திட்டங்களில் இருக்கக் கூடிய உண்மை நிலையைப் புரிந்து கொள்ளாமல் அல்லது புரிந்து கொள்ளக் கூடிய தன்மையில்லாமல் ஒருஅரை குறையாக இந்தத் திட்டங்கள் குறித்து விமர்சனங்களை முன்வைத்திருக்கின்றார்.

உள்ள படியே இந்தஎண்ணூர் அனல் மின்நிலையத்தினுடைய விரிவாக்கத் திட்டம் 2006-11 திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சியில் முத்தமிழ் அறிஞர் கலைஞருடைய பொற்கால ஆட்சியில் உருவாக்கப்பட்டத் திட்டம். இந்தத் திட்டத்தினுடைய அடிப்படைப் பணிகளை பொறுத்தவரை குறிப்பாக இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கிய தேதி 5.9.2006. அந்தத்தேதியில் தான் இந்தப் புதிய திட்டப் பணிகளுக்காக அரசு முடிவெடுக்கப்பட்டுள்ளது. 8.11.2006 அன்று இந்தத் திட்டத்திற்கான அனுமதிகளை தமிழக அரசு வழங்கியுள்ளது. 24.6.2008 அன்று இதற்கான மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு 13.7.2010 அன்று இந்தத் திட்டங்கள் குறித்த ஒப்பந்தப்புள்ளி விபரங்கள் கோரப்பட்டன. ஏறத்தாழ 10 ஆண்டுகள் இந்தத் திட்டங்கள் முடிவுறாமல் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பணிகள் அப்படியே நிலுவையில் விடப்பட்டிருந்தன.

குறிப்பாக 500 மெகாவாட் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டம் அப்படியே செயல்படுத்தி விடக் கூடாது என்று கடந்த அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் அந்த மதிப்பீடுகளை உயர்த்தி அதற்கான 500 என்பதையும் கூடுதலாக உயர்த்திபுதிய திட்டங்களைப் போல செயல்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டு அதற்கான பணிகளை தொடங்கி அப்பொழுது கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொடுக்கப்பட்ட அந்தப் பணிகளும் 30.5.2017 அன்றுகொடுக்கப்பட்டப் பணிகள் ஏறத்தாழ 17.9 விழுக்காடு மட்டுமே பணிகள் முடிவுற்ற நிலையில் அப்பொழுது கொடுக்கப்பட்டிருந்த லேம்கோ நிறுவனத்திற்கான அந்த ஒப்பந்தப் புள்ளிகள் இரத்து செய்யப்பட்டு மீண்டும் மீதியிருக்கக் கூடிய பணிகளுக்கு புதிய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு அந்த ஒப்பந்தப்புள்ளிகள் 10.8.2018 அன்று அங்கே கலந்து கொண்ட பி.ஜி.ஆர். நிறுவனங்கள் BHEL இரண்டு நிறுவனங்கள் அதிலே குறைந்த விலைப்புள்ளிகளை எட்டிய பி.ஜி.ஆர். நிறுவனத்திற்கு கடந்த ஆட்சியில் அனுமதிகள் வழங்கப்பட்டு அதற்கான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

மீண்டும் பணி தொடங்க நடவடிக்கை!

இந்த நிலையில் 2019தொடங்கி 2021 வரை கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற்றுத் தராமல் 2 ஆண்டு காலம் முறையான அனுமதி அவர்களுக்குக் கிடைக்காமல் அதற்கான பணிகளைத் தொடங்க முடியாத சூழலில் மீண்டும் அந்த அனுமதியைப் பெற்ற பிறகு அந்தப் பணிகளைத் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

இன்று தெரிவிக்கப்பட்டிருக்கின்ற குற்றச்சாட்டுக்களைப் பொறுத்தவரை டெபாசிட் 10 சதவீதமாக இருந்தது. அதைக் குறைத்து தமிழக அரசு மின்சார வாரியம் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு சலுகையைக் காட்டியது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கியிருக்கின்றார். உள்ளபடியே ஒரு ஆவணத்தை உங்களிடத்தில் எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.

அதை நகலாகவும் வழங்குகின்றேன். ஒன்றிய அரசு குறிப்பாக நவம்பர் 2020 அன்று மின் திட்டங்கள் குறித்த இதற்கான வைப்புத் தொகை என்பது 3 விழுக்காடாக அதற்கான மதிப்பீடுகளை அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருக்கின்றது.

அந்த சுற்றறிக்கையின்அடிப்படையில் தான்அந்த 3 விழுக்காடானவைப்புத் தொகை என்பதை இறுதி செய்யப்பட்டிருக்கின்றன. அந்த 3விழுக்காடு என்பதைஇறுதி செய்யப்படும் என்பதைக் கூட பி.ஜி.ஆர். நிறுவனம் நீதிமன்றத்திற்குச் சென்று நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை அந்த நீதிமன்றத்திலே வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அந்த வழக்கின் அடிப்படையில் மின்சார வாரியத்தினுடைய குழுக்கூட்டம் கூட்டப்பட்டு அந்த அதற்கான ஒப்புதல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

இரண்டாண்டு காலம் இழுத்தடிப்பு !

எனவே, 10 விழுக்காடா அல்லது 5 விழுக்காடா டெபாசிட் தொகை அல்லது 3 விழுக்காடா என்பது அரசு எடுக்கக் கூடிய குறிப்பாக இன்னும் சொல்லப்போனால் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் இந்த 10 சதவிகிதம் டெபாசிட் என்பது எப்படி விதிமுறைகளை மீறி குறிப்பாக நீங்கள் எல்லாம் எடுத்துப் பாருங்கள் இதற்கான ஒப்பந்தப் புள்ளிகளுக்கான விதிமுறைகள் இருக்கின்றது. அரசினுடைய வழிகாட்டு விதிமுறைகள் இருக்கிறது. அதன் ளுநஉ.14.3 (ய)-ல் 5 விழுக்காடுகளுக்கு மிகாமல் அந்த வைப்புத்தொகை இருக்க வேண்டும். ஆதலால் அப்போது இருந்த அ.தி.மு.க. அரசின் மின் வாரியம் 10 விழுக்காடு என்று நிர்ணயித்து அதற்கான வைப்புத் தொகையை இதனால் ஏற்பட்ட பிரச்சினையால் இந்த இரண்டு ஆண்டுகாலம் இழுத்தடிப்பு செய்யப்பட்டிருக்கின்றன.

அதன் பிறகு அவர்கள் அந்த 5 விழுக்காடு என்ற இலக்கை எட்டிய பிறகு ஒன்றிய அரசின் சுற்றறிக்கையின் அடிப்படையில் 3 விழுக்காட்டிற்கு நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை. அதுவும் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அந்த வழக்கின் அடிப்படையில் க்ஷடியசன ஆநநவiபே-ல் தீர்மானிக்கப்பட்டு அதற்கான பணிகள் தான் இப்பொழுதுமுன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக 2019ல் அந்தப் பணிகளை கொடுக்கும் பொழுது 4,440 கோடி இப்பொழுது 2022 ஏறத்தாழ மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 2019ல் என்ன மதிப்பீட்டில் தயார் செய்யப்பட்டதோ அதே மதிப்பீடுகள் தான் 2022ம் ஆண்டு. மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அதே மதிப்பீட்டில் தான் ஒரு பைசா கூட உயர்த்தப்படாமல் அப்பொழுது என்ன திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டதோ அதே மதிப்பீட்டில் தான் இப்போதும் அவர்களுக்கு அதற்கானப் பணிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இப்பொழுது அதனுடைய திட்ட மதிப்பீடு அந்த நிதி என்பது கூடுதலாக இருக்கும் என்று கருதினால் 2019 அவர்கள் கூட்டணில் இருந்த கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் எப்படி மூன்று ஆண்டுகளுக்கு முன்பாகவே அதற்கான மதிப்பீடுகள் தயார்செய்யப்பட்டார்கள்.

அந்த மூன்று ஆண்டுகளில் ஒரு ரூபாய் கூட உயர்த்தாமல் அதே நிதிக்கு இந்த நிறுவனங்கள் அதற்கான பணிகளைச் செய்வதற்காக முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. எனவே, நான் இந்த நேரத்தில் உங்கள் வாயிலாக கேட்டுக் கொள்வதுஒரு மாநிலத் தலைவராக பொறுப்பு வகிக்கக் கூடியவர். ஒரு விபரங்களை வெளியிடுவதற்கு முன்பாக முழு விபரங்களையும் தெரிந்துகொண்டு, அதனுடைய உண்மைத்தன்மைகளை புரிந்துகொண்டு, புரிந்து கொள்வதற்கு தனக்கு புத்தியில்லை என்று சொன்னால், தெரிந்தவர்களிடம் கேட்டு தன்னை பக்குவப்படுத்திக் கொள்ளக்கூடிய நிலையில், பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் சரி, பொது வெளியிலும் சரி கருத்துக்களைஎடுத்துச் சொல்ல வேண்டும்.

கிராமத்தில் எங்கள் பகுதியில் ஒரு பழமொழிசொல்வார்கள். “உள்ளூரில் விலை போகாத மாடு வெளியூர் சந்தையில் சிலுத்துக் கிட்டு திரியும்”என்று சொல்வார்கள். அதனுடைய அர்த்தம் எல்லோருக்கும் தெரியும். அதனால் 2021ல் சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி மக்களால் புறக்கணிக்கப்பட்டவர். வெளியூர் சந்தையில்போய் ஏதேதோ காரணங்கள் சொல்வார்கள். அது மாதிரி ஒரு கருத்தை வெளியிடுவதற்கும் முன்பாக, ஒரு குற்றச்சாட்டுக்களை வைப்பதற்கு முன்பாக அதனுடைய முழுவிபரங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும் .இந்த நேரத்தில் கருத்தை சொல்லவிரும்புகிறேன். முன் வைப்பது சரியாக இருக்கும். இந்த பிஜிஆர் நிறுவனத்தைப் பொறுத்தவரை கோபாலபுரம் பணம் அதில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது என்ற ஒரு கருத்தைச் சொல்லியிருக்கின்றார்.

அதற்கு 24 மணி நேரம் அவகாசம் வழங்குகிறோம். எந்த வகையில் இந்த குற்றச்சாட்டுக்களை சுமத்தினார். எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இந்த குற்றச்சாட்டுக்களை சொன்னார். எங்கேயிருந்து இது போன்ற பரிவர்த்தனைகள் நடந்தது என்பதை அவர் உங்கள் முன்பாக தெளிவுபடுத்த வேண்டும். இல்லையென்று சொன்னால் அவர் மீது எங்களுடைய துறையின் சார்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories