தமிழ்நாடு

தாயை திட்டிய தந்தை.. ஆத்திரத்தில் மகன் செய்த கொடூரச் செயல்: நடந்தது என்ன?

சென்னையில் தாயைத் திட்டி தகராறில் ஈடுபட்ட தந்தையைக் குடிபோதையில் கழுத்தை நெரித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

தாயை திட்டிய தந்தை.. ஆத்திரத்தில் மகன் செய்த கொடூரச் செயல்: நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை கே.கே நகர் அம்பேத்கர் குடில் பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மாள். இவர் நுங்கம்பாக்கத்தில் வசிக்கும் வயதான தம்பதியருக்கு பணிவிடைகள் செய்யும் வேலை செய்து வருகிறார்.

இவரது கணவர் தேசமுத்து, பெயின்டிங் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 9 ஆம் தேதி கணவன் தேசமுத்து படுக்கையில் பேச்சு மூச்சின்றி இருந்ததால் அவரை முனியம்மாள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டாக கூறியுள்ளனர். இதைகேட்டடு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் கணவனின் மர்ம மரணம் குறித்து காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

இதையடுத்து போலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர். இதில் கடந்த 8 ஆம் தேதி இரவு குடிபோதையில் தேசமுத்து மனைவி முனியம்மாவை தகாத முறையில் திட்டி தகராறில் ஈடுபட்டுள்ளார். தாயைத் திட்டியதால் ஆத்திரமடைந்த மகன் இரவு அனைவரும் தூங்கிய பின்பு செல்போன் சார்ஜ் போடும் ஒயரால் தந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.

அதனடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து தந்தையைக் கொலை செய்த மகன் டேவிட்டை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories