தமிழ்நாடு

"13 பேருக்கும் ஒமைக்ரான் தொற்று இல்லை.. மீண்டும் பரிசோதனை”:அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன முக்கிய தகவல்!

தான்சானியா, கானா போன்ற நாடுகளில் இருந்து வருபர்களுக்கும் இனி விமான நிலையங்களில் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை கட்டாயம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

"13 பேருக்கும் ஒமைக்ரான் தொற்று இல்லை.. மீண்டும் பரிசோதனை”:அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன முக்கிய தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர் விடுதியில் 9 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள விடுதியை பார்வையிட்ட பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர் விடுதியில் 9 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று 1 மாணவருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து விடுதியில் உள்ள 300 மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில். 9 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதித்த மாணவர்கள் கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .

பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் அதிகமானோர் ஒரே இடத்தில் கூடும்போது தனிமனித இடைவெளியை பின்பற்றி, முறையாக கட்டாயம் முகக் கவசம் அணியவேண்டும். உயர்கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த அதிகாரிகளோடு நாளை ஆலோசனை மேற்கொண்டு பள்ளி, கல்லூரி வளாகம் மற்றும் விடுதிகள், உணவகங்களில் பின்பற்றப்படும் விதிமுறைகளை கடுமையாக கண்காணிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவித்தார்.

High Risk நாடுகளிலிருந்து வரும் பயணிகளில் 9,012 பேருக்கு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் இதுவரை 11 பேருக்கு தொற்று உறுதி படுத்தப்பட்டுள்ளது. Non Risk நாடுகளிலிருந்து வரும் பயணிகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

13 பேரின் மாதிரிகளை தமிழகத்தில் உள்ள மரபணு சோதனை மையங்களில் ஆய்வு மேற்கொண்டதில் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்படவில்லை. மறு ஆய்வுக்குட்படுத்த பெங்களூருவில் உள்ள மரபணு சோதனை மையத்திற்கு 13 பேரின் மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளது. இன்று அல்லது நாளை அதன் முடிவுகள் வெளிவரும். ஒரு மாநில அரசு அதிக மரபணு பரிசோதனை மையங்கள் வைத்துள்ளது தமிழகத்தில்தான்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், “தான்சானியா, கானா போன்ற நாடுகளில் இருந்து வருபர்களுக்கும் இனி விமான நிலையங்களில் கட்டாயம் பரிசோதனை மேற்கொள்ளப்படும். High Risk Country (அதிக பாதிபுள்ள நாடுகள்) எண்ணிக்கை 13-ஆக உயர்த்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories