தமிழ்நாடு

“அம்மா - மகள் இரட்டை கொலை வழக்கில் குற்றவாளி கைது - 24 மணி நேரத்தில் பிடித்த போலிஸார்” : நடந்தது என்ன?

புதுவை அருகே தமிழக எல்லையில் நடைபெற்ற இரட்டை கொலை குற்றவாளியை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

“அம்மா - மகள் இரட்டை கொலை வழக்கில் குற்றவாளி கைது - 24 மணி நேரத்தில் பிடித்த போலிஸார்” : நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

விழுப்புரம் மாவட்டம் புதுவை மாநில எல்லை ஓரமாக தமிழகப் பகுதியான கலித்தரம்பட்டு என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நேற்று இரவு 80 வயது மதிக்கத்தக்க தாய் மற்றும் 60 வயது மதிக்கத்தக்க அவரது மகள் ஆகிய இருவரும் மர்மமான முறையில் கொலையுண்டு கிடந்தனர்.

இதுபற்றி வழக்குப்பதிவு செய்த விழுப்புரம் மாவட்ட காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த இரட்டைக் கொலை பற்றி போலிஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இதுபற்றி தகவல் அறிந்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கலித்திரபட்டு ஊராட்சிக்கு நேரில் சென்று கொலையுண்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறி, மத்திய மாவட்ட கழகத்தின் சார்பாக 50,000 நிவாரண தொகையை வழங்கினார்.

“அம்மா - மகள் இரட்டை கொலை வழக்கில் குற்றவாளி கைது - 24 மணி நேரத்தில் பிடித்த போலிஸார்” : நடந்தது என்ன?
கவிதாஸ்

பின்னர், செய்தியாளர்கள் பேசிய அவர், “இந்த கொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளை நாளைக்குள் தமிழகம் மற்றும் புதுச்சேரி காவல்துறையினர் பிடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்” என கூறினார்.

இந்நிலையில் இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஒரு போர் ஒட்டனந்தல் கிராமத்தைச் சேர்ந்த கவிதாஸ் என்ற இளைஞரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் இரட்டை கொலையில் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் போலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories