தமிழ்நாடு

விசாரிக்கச் சென்ற காவலர்களுக்கு கத்திக்குத்து.. தப்பியோடிய இளைஞரை விரட்டிப்பிடித்த போலிஸ் : நடந்தது என்ன?

விசாரிக்கச் சென்ற தலைமை காவலர்களை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய இளைஞரை கொடைக்கானல் அடிவாரப் பகுதியில் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரிக்கச் சென்ற காவலர்களுக்கு கத்திக்குத்து.. தப்பியோடிய இளைஞரை விரட்டிப்பிடித்த போலிஸ் : நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதி எப்போதும் பரபரப்பாக பொதுமக்கள் நடமாட்டத்துடன் காணப்படும். காவலர்கள் வாகன தணிக்கையில் இந்தப் பகுதியில்  ஈடுபடுவதும் வழக்கம். இந்நிலையில்  மூஞ்சிக்கல் பகுதியில் நேற்று மாலை வேளையில் வழக்கம்போல் மகளிர் காவலர்கள் இருவர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது மூஞ்சிக்கல் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் மற்றும் முகக்கவசம் இல்லாமல் அதிவேகமாக இளைஞர் ஒருவன் வந்துள்ளான். அப்போது மகளிர் காவலர்கள் அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது குடிபோதையில் இருந்த இளைஞனை குடி போதையில் வாகனம்  இயக்கக்கூடாது என எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து அங்கிருந்த மகளிர் காவலர்கள் வேறு பகுதிக்கு வாகன தணிக்கைக்கு செல்லும்போது, அவர்களை பின்தொடர்ந்த அந்த இளைஞன் மகளிர் காவலர்கள் சென்ற இரு சக்கர வாகனத்தினை தடுத்து நிறுத்தி தகாத வார்த்தைகளால் பேசி வாக்குவாதம் செய்து இதனை காவல் கண்காணிப்பாளரிடம் தெரிவிக்குமாறு மிரட்டியதோடு, தனது பெயர் மற்றும் முகவரியையும் கூறி சினிமா பாணியில் வசனம் பேசி சென்றுள்ளான்.

விசாரிக்கச் சென்ற காவலர்களுக்கு கத்திக்குத்து.. தப்பியோடிய இளைஞரை விரட்டிப்பிடித்த போலிஸ் : நடந்தது என்ன?

இதனால் மனமுடைந்த மகளிர் காவலர்கள் கொடைக்கானல் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இதுகுறித்து தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் முதன்மை காவலர்களான சின்னசாமி சீனிவாசன் ஆகியோர் அன்னை தெரசா நகர் பகுதியில் உள்ள சையது இப்ராகிம் வீட்டிற்கு சென்று அந்த இளைஞனை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

காவல் நிலையத்திற்கு அழைத்து வரும் வழியில் தான் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியினை எடுத்து சின்னசாமி என்ற காவலரை தலையின் பின் பகுதியிலும், சீனிவாசன் என்ற காவலரை கையிலும் வெட்டிவிட்டு கண் இமைக்கும் நொடியில் தப்பியுள்ளான்.

காயமடைந்த  தலைமைக் காவலர்கள் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக சென்று சிகிச்சை பெற்றனர். இதில் சின்னசாமிக்கு தலையில் 15 தையலும், சீனிவாசனுக்கு கையில் 2 தையலும் போடப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தப்பியோடிய இளைஞனை காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்தநிலையில் கொடைக்கானல் வத்தலகுண்டு பிரதான மலைச்சாலை நுழைவு வாயில் காமக்காப்பட்டி சோதனை சாவடியில்  சுற்றுலா வாகனம் இண்டிகாவை அங்கிருந்த காவலர்கள் சோதனை செய்யும்போது வாகனத்தில், மறைந்திருந்த சையது இப்ராகிம் வாகனத்தில் இருந்து  இறங்கி காவலர்களை தள்ளிவிட்டு மீண்டும் தப்பி ஓடியுள்ளான். இதனைப் பார்த்த 3 காவலர்கள் சுமார் 50 மீட்டர் தூரம் ஓடி சையது இப்ராகிமை  வளைத்து பிடித்தனர். தகவல் அறிந்து விரைந்த வந்த திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் நேரில் விசாரணை செய்தனர்.

அதன் பின்னர் இப்ராகிம்மை பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து கொடைக்கானலுக்கு விரைந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் அரசு மருத்துவமனைக்கு வருகை புரிந்து காயமடைந்த இரு தலைமை காவலர்களை நேரில் நலம் விசாரித்து ஆறுதல் தெரிவித்து சென்றார்.

சையது இப்ராகிம் இதுபோன்று ஏற்கனவே காவலரை தாக்கியதால் குண்டாஸ் வழக்கு, உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் குடிபோதையில் இருந்த இளைஞர் மகளிர் காவலர்களை தகாத வார்த்தைகளால் பேசியதும், தலைமை  காவலர்களை கத்தியால் குத்தியதும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories