தமிழ்நாடு

தமிழகம் நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி; சென்னை உட்பட 10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!

வடதமிழ்நாடு கடலோரப் பகுதிகள் மற்றும் தென் மாவட்டங்களில் அடுத்த இரு தினங்களுக்கு மிக கனமழை பெய்யக்கூடும்.

தமிழகம் நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி; சென்னை உட்பட 10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தெற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று உருவாகி இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் தமிழ்நாடு கடல் பகுதிக்கு நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.

இதன் காரணமாக வடதமிழ்நாடு கடலோரப் பகுதிகள் மற்றும் தென் மாவட்டங்களில் அடுத்த இரு தினங்களுக்கு மிக கனமழை பெய்யக்கூடும்.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக

28.10.2021:, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருநெல்வேலி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், தஞ்சாவூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், இதர கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

29.10.2021: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், சிவகங்கை, செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

தமிழகம் நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி; சென்னை உட்பட 10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!

30.10.2021, 31.10.2021: திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

01.11.2021: கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யகூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யகூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

தமிழகம் நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி; சென்னை உட்பட 10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்க கடல் பகுதிகள்

28.10.2021 முதல் 30.10.2021: தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் அவ்வப்போது 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

29.10.2021 முதல் 31.10.2021: குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் அவ்வப்போது 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அரபிக்கடல் பகுதிகள்

29.10.2021 முதல் 31.10.2021: கேரள கடலோரப் பகுதி, தென்கிழக்கு அரபிக்கடல், மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் அவ்வப்போது 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

banner

Related Stories

Related Stories