தமிழ்நாடு

“காணாமல் போன இரண்டரை வயது குழந்தை ஏரியில் சடலமாக மீட்பு” : சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள்!

காஞ்சிபுரம் மாவட்டம் உமையால் பரணி சேரி கிராமத்தில் காணாமல் போன இரண்டரை வயது குழந்தை வீட்டின் அருகில் உள்ள ஏரியில் சடலமாக மீட்கபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“காணாமல் போன இரண்டரை வயது குழந்தை ஏரியில் சடலமாக மீட்பு” : சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஒரகடம் அடுத்துள்ள உமையாள் பரணிச்சேரி கிராமத்தில் வசிக்கும் சுதாகர் மலர்விழி தம்பதியரின் இரண்டரை வயது மகள் பிரதிக்க்ஷா. இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த குழந்தை தீடிரென காணாமல் போயுள்ளனர்.

குழந்தையின் கழுத்தில் ஒரு சவரன் தங்கச் செயின் மற்றும் வெள்ளி கொலுசு அணிந்து இருந்ததாகவும், உறவினர்களின் வீட்டிற்கு சென்று இருப்பதாக நினைத்துக்கொண்டு அலட்சியமாக இருந்ததாகவும் குழந்தையின் பெற்றோர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் நேற்றுக் காலை 11 மணி முதல், மாலை 3 மணிவரை தேடியும் குழந்தை கிடைக்காததால் ஒரகடம் காவல்துறையினருக்கு பெற்றோர்கள் தகவல் அளித்ததன் பேரில், விரைந்து வந்த ஒரகடம் காவல்துறையினர் மற்றும் திருப்பெரும்புதூர் தீயணைப்பு துறையினர் குழந்தையை தேடும் பணியை தீவிரப்படுத்தினார்கள்.

மேலும் அருகிலுள்ள உறவினர்களின் வீடுகள் ஏரி குளம் மற்றும் காட்டுப்பகுதி எங்கு தேடியும் குழந்தை இரவு 11மணிவரை கிடைக்காததால் குழந்தையின் பெற்றோர்கள் உறவினர்கள் கிராம பொதுமக்கள் உட்பட ஒட்டுமொத்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.

“காணாமல் போன இரண்டரை வயது குழந்தை ஏரியில் சடலமாக மீட்பு” : சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள்!

திருப்பெரும்புதூர் காவல் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு இரவு முழுவதும் காவல்துறையினர் குழந்தையை தேடும் பணி மேலும் தீவிரப்படுத்தினார்கள். இந்நிலையில், குழந்தையை இரவு முழுவதும் தேடி வந்த நிலையில் இன்று காலை வீட்டின் அருகில் உள்ள ஏரியில் குழந்தையை பொதுமக்கள் முன்னிலையில் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் சடலமாக மீட்டனர்.

குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். காணாமல்போன இரண்டரை வயது குழந்தை பிரதிக்க்ஷா ஏரியில் சடலமாக மீட்கப்பட்டது அந்த பகுதியில் உள்ள கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலிஸார் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories