தமிழ்நாடு

“கல்லூரி மாணவி குத்தி கொலை.. கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்” : சென்னையில் நடந்த பயங்கரம்!

சென்னை தாம்பரம் அருகே இரயில்வே குடியிருப்பு பகுதியில், கல்லூரி மாணவியை கத்தியால் குத்திவிட்டு இளைஞரும் கழுத்து அறுத்துக்கொண்டு தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“கல்லூரி மாணவி குத்தி கொலை.. கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்” : சென்னையில் நடந்த பயங்கரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை குரோம்பேட்டை ராதாநகர் பகுதியைச் சேர்ந்தவர் மதியழகன். இவரது மகள் சுவேதா சென்னை தாம்பரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் லேப் டெக்னீசியன் பயிற்சி வகுப்பில் படித்து வருகிறார். இந்நிலையில் அதேகல்லூரியைச் சேர்ந்த திருக்குவளைப் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரும் நீண்ட நாள் நண்பர்கள் எனக் கூறப்படுகிறது.

இதனிடையே இன்று சுவேதாவை வழிமறித்து ராமச்சந்திரன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்ததாக் கூறப்படுகிறது. அப்போது, ராமச்சந்திரன் தான் மறைந்து வைத்துருந்த கத்தியால் மாணவியின் கழுத்தில் குத்திவிட்டு ராமச்சந்திரனும் தானே கத்தியால் கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலை முயற்சி செய்துள்ளனர்.

இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக சேலையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்த போலிஸார் இருவரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வைத்திருந்தார். தற்போது ராமச்சந்திரன் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி வருகிறார். இதில், கல்லூரி மாணவி சுவேதா சம்பவ இடத்தில் பலியானார். காதல் விவகாரமா இல்லை வேறு ஏதேனும் காரணமா என சேலையூர் சரக உதவி ஆணையாளர் முருகேசன் தலைமையில் போலிஸார் விசாரணை செய்து வருகிறார்கள்.

banner

Related Stories

Related Stories