தமிழ்நாடு

“தமிழ்நாடு அரசு விருதிற்காக வழங்கும் ரூ.10 லட்சத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்குகிறேன்”: என்.சங்கரய்யா!

“தமிழ்நாடு அரசு‘தகைசால் தமிழர்’ விருதிற்காக அளிக்கப்படும் ரூ.10 லட்சத்தை முதலமைச்சரின் கொரோனா பேரிடர் நிவாரண நிதிக்கு மகிழ்ச்சியோடு வழங்குகிறேன்”என மூத்த தலைவர் என்.சங்கரய்யா அறிவித்துள்ளார்.

“தமிழ்நாடு அரசு விருதிற்காக வழங்கும் ரூ.10 லட்சத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்குகிறேன்”: என்.சங்கரய்யா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருதினை ஏற்றுக் கொள்வதோடு, இந்த விருதிற்காக அளிக்கப்படும் ரூ.10 லட்சம் தொகையினை முதலமைச்சரின் கோவிட் 19 பேரிடர் நிவாரண நிதிக்கு மகிழ்ச்சியோடு வழங்குகிறேன் என பொதுவுடமை இயக்க மூத்த தலைவர் என்.சங்கரய்யா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர். என். சங்கரய்யா விடுத்துள்ள பத்திரிகைச் செய்தி பின்வருமாறு:- தமிழ்நாடு அரசு புதிதாக அறிவித்துள்ள ‘தகைசால் தமிழர்’ விருதினை இந்தாண்டுக்கு எனக்கு வழங்குவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

எனது சேவையை பாராட்டும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இவ்விருதினை ஏற்றுக் கொள்வதோடு, எனக்கு இந்த விருதினை அளித்திருக்கிற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“தமிழ்நாடு அரசு விருதிற்காக வழங்கும் ரூ.10 லட்சத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்குகிறேன்”: என்.சங்கரய்யா!

இந்த விருதிற்காக அளிக்கப்படும் ரூ. 10 லட்சம் தொகையினை கோவிட் 19 பாதிக்கப்பட்ட மக்களுக்காக தமிழ்நாடு அரசு திரட்டி வரும் முதலமைச்சரின் கோவிட் 19 பேரிடர் நிவாரண நிதிக்கு மகிழ்ச்சியோடு வழங்குகிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாணவனாக இருந்த காலந்தொட்டு இன்று வரை தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கும், இந்திய நாட்டில் விடுதலைக்கும், உழைப்பாளி மக்கள் நலன் காத்திடவும் என்னால் முடிந்தளவு பணியாற்றியுள்ளேன், சுரண்டலற்ற பொதுவுடமை சமுதாயத்தை உருவாக்க நான் ஏற்றுக் கொண்ட மார்க்சிய கொள்கையின் அடிப்படையில் பயணம் செய்துள்ளேன். எனது இறுதி மூச்சு வரை இப்பணியை தொடர்ந்து நிறைவேற்றுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories