தமிழ்நாடு

“தடுப்பூசியை உரிய முறையில் பெற முன்பதிவு செய்து உயிர்பலியை தடுப்போம்”: ‘தினகரன்’ நாளேடு வலியுறுத்தல்!

தடுப்பூசியை உரிய முறையில் பெற முன்பதிவு செய்து கொரோனா உயிர்பலியை தடுப்போம். சமூக அக்கறையுடன் இருப்போம். அனைவரது உயிரையும் காப்போம் தினகரன் நாளிதழ் தலையங்கத்தில் வலியுறுத்தியுள்ளது.

“தடுப்பூசியை உரிய முறையில் பெற முன்பதிவு செய்து உயிர்பலியை தடுப்போம்”: ‘தினகரன்’ நாளேடு வலியுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இதுவரை வந்த இரண்டு அலைகளையும் விட அதிக தாக்கம் கொண்டதாக அடுத்த அலை இருக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து வருகிறார்கள். எனவே கவனமாக இருக்க வேண்டியது அனைவரது கடமை. அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்து உயிரை காப்பதுடன், உறவுகளையும் காப்பது இந்த சோதனையான காலகட்டத்தில் மிகவும் முக்கியம் என தினகரன் நாளிதழ் தலையங்கத்தில் வலியுறுத்தியுள்ளது.

‘தினகரன்’ நாளேட்டில் வெளியாகியுள்ள தலையங்கம் பின்வருமாறு: -

கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் தற்போது ஒரே மாதிரியான தளர்வுகள் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில், அவர்களது பணிகள் முடங்காத வகையில் படிப்படியான தளர்வுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கொரோனா கொடூரமான நோய் என்பதை இனிமேல் யாருக்கும் சொல்லித்தெரிய வேண்டியது இல்லை. போதுமான சேதாரத்தை ஒவ்வொரு குடும்பத்திலும் கொரோனா நிகழ்த்திவிட்டு சென்றுவிட்டது. எனவே தொற்றின் உச்சம் அனைவருக்கும் தெரியும். இனிமேல் தொற்றாமல் இருக்கவும் அனைவருக்கும் தெரியும். அதுதான் இப்போது முக்கியம்.

ஏனெனில் இரண்டாம் அலை நாடு முழுவதும் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்டது. ஆனால் அடுத்த அலை விரைவில் தாக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து வருகிறார்கள். அந்த அலை, இதுவரை வந்த இரண்டு அலைகளையும் விட அதிக தாக்கம் கொண்டதாக இருக்கும் என்றும் கருதுகிறார்கள். எனவே கவனமாக இருக்க வேண்டியது அனைவரது கடமை. அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்து உயிரை காப்பதுடன், உறவுகளையும் காப்பது இந்த சோதனையான காலகட்டத்தில் மிகவும் முக்கியம்.

“தடுப்பூசியை உரிய முறையில் பெற முன்பதிவு செய்து உயிர்பலியை தடுப்போம்”: ‘தினகரன்’ நாளேடு வலியுறுத்தல்!

பஸ் சேவை தொடங்கி விட்டது, அலுவலகங்கள் முழுவீச்சில் இயங்குகின்றன. அனைத்து மார்க்கெட்டுகளும் முழுமையாக செயல்படுகின்றன. இந்த நேரத்தில் தான் மக்கள் விழிப்புணர்வை கடைபிடிக்க வேண்டும். அதை அரசு மட்டும் செயல்படுத்த முடியாது. ஒவ்வொருவர் வீட்டில் இருந்தும் செயல்படுத்துவது முக்கியம். வீட்டை விட்டுவெளியே வரும் போதே முக கவசம் முக்கியம். எங்கு, எந்த இடத்திற்கு சென்றாலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் கைகழுவ வேண்டும். இவை எல்லாம் அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் தெரிந்தும், இன்றுவரை எல்லோரும் கடைபிடிக்காத நடைமுறைகள். அதனால் தான் இரண்டாம் அலை நம்மில் நெருக்கமான பலரை கொண்டு சென்று விட்டது.

இனிமேலாவது சுயகட்டுப்பாட்டுடன் இருப்போம். காய்கறி, மீன், இறைச்சி கடைகளுக்கு செல்லும் போதும், வர்த்தக மையங்களுக்கு சென்றாலும் சமூக இடைவெளியுடன் வரிசையில் நின்று கொரோனாவை அண்டவிடாமல் தடுப்போம். முடிந்த அளவுக்கு கையில் குடை எடுத்துச்செல்லுங்கள். குடைபிடித்தபடி கடைகளில் வரிசையில் நிற்க முயன்றால் போதுமான சமூக இடைவெளி கிடைத்துவிடும்.

அடுத்ததாக இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் உரிய முகாம்களுக்கு சென்று தடுப்பூசி போடுவதில் அதிக அக்கறை செலுத்துவோம். ஒன்றிய அரசு போதுமான தடுப்பூசி சப்ளை செய்வது இல்லை. இருப்பினும் கிடைக்கும் தடுப்பூசியை உரிய முறையில் பெற முன்பதிவு செய்து கொரோனா உயிர்பலியை தடுப்போம். சமூக அக்கறையுடன் இருப்போம். அனைவரது உயிரையும் காப்போம்.” எனத் தெரிவித்துள்ளன.

banner

Related Stories

Related Stories