தமிழ்நாடு

ஜூலை 2 வரை 9 மாவட்டங்களில் கனமழைக்கும், டெல்டா, வட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் -வானிலை அப்டேட்

பலத்த காற்று எதிரொலி காரணமாக தென் மேற்கு, மத்திய மேற்கு மற்றும் வடக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு ஜூலை 4 வரை மீனவர்கள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜூலை 2 வரை 9 மாவட்டங்களில் கனமழைக்கும், டெல்டா, வட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் -வானிலை அப்டேட்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனத்தின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தேனி, திண்டுக்கல், சேலம், மதுரை, தர்மபுரி, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

வெப்பசலனத்தின் காரணமாக 01.07.2021: தேனி, திண்டுக்கல், சேலம், மதுரை, தர்மபுரி, சிவகங்கை விருதுநகர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ஜூலை 2 வரை 9 மாவட்டங்களில் கனமழைக்கும், டெல்டா, வட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் -வானிலை அப்டேட்

02.07.2021, வேலூர், ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (தேனி திண்டுக்கல் தென்காசி) மாவட்டங்கள், வடமாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

03.07.2021:மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோயம்புத்தூர் தேனி திண்டுக்கல் தென்காசி) மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

04.07.2021: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோயம்புத்தூர் தேனி திண்டுக்கல் தென்காசி) மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ஜூலை 2 வரை 9 மாவட்டங்களில் கனமழைக்கும், டெல்டா, வட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் -வானிலை அப்டேட்

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் காலை நேரங்களில் தெளிவாகவும் மாலை நேரங்களில் ஓரளவு மேகமூட்டத்துடனும் காணப்படும், நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் காலை நேரங்களில் தெளிவாகவும் மாலை நேரங்களில் ஓரளவு மேகமூட்டத்துடனும் காணப்படும், நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

அரபிக்கடல் பகுதிகள்:

ஜூலை 4 வரை தென் மேற்கு, மத்திய மேற்கு மற்றும் வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories