தமிழ்நாடு

செயலி மூலம் முதலீடு செய்தால் வருமானம் இரட்டிப்பு என நூதன திருட்டு: டெல்லி கும்பலுக்கு சைபர் க்ரைம் வலை!

லோன் வழங்கும் செயலியை தொடர்ந்து புதிய செயலிகள் மூலம் முதலீடு செய்யக்கோரி பண மோசடியில் ஈடுபட்ட கும்பல்கள் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

செயலி மூலம் முதலீடு செய்தால் வருமானம் இரட்டிப்பு என நூதன திருட்டு: டெல்லி கும்பலுக்கு சைபர் க்ரைம் வலை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

லோன் வழங்குவதாக கூறி பல்வேறு போலி செயலிகளை உருவாக்கி பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபட்டு வந்த சீன நாட்டு சேர்ந்தவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் தற்போது குறைந்த முதலீடு செலுத்தினால் அதிக லாபம் பெற முடியும் எனக் கூறி சில செயல்களின் மூலம் பல கும்பல்கள் பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் சமீபகாலமாக சென்னையில் குறைந்த முதலீடு செய்தால் மணி கணக்கு நாள் கணக்கில் அதிக லாபம் ஈட்ட முடியும் எனக்கூறி power bank, telsa power bank உள்ளிட்ட செயலிகள் மூலம் விளம்பரப்படுத்தி மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.

அது மட்டுமின்றி இந்த செயலிகளில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்ட முடியும் எனக்கூறி பொதுமக்களை முதலீடு செய்ய வைக்கின்றனர். அதேபோல் ஆரம்பத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு ஏற்றார் போல் ஒரு சிறிய அளவு தொகையை திரும்ப செலுத்தி மக்களிடம் நம்பிக்கை பெறும் வகையில் செயல்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, முதலீடு செய்யும் தொகையானது வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்படாமல் Google pay, paytm உள்ளிட்ட ஆன்லைன் கட்டண செய்திகளுக்கு அனுப்பச் சொல்லி தெரிவிக்கின்றனர்.

அதேபோல் இந்த வகை செயலிகளை செல்போனில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் பதிவிறக்கம் செய்யப்படும் நபரின் தகவல்களை திருடி கொள்கின்றனர். ஆனால் அவர்கள் யார் என்கின்ற தகவல்களை வெளியிட மாட்டார்கள். அந்த வகையில் 34க்கும் மேற்பட்டவர்கள் power bank செயலி மூலம் பணத்தை முதலீடு செய்த ஏமாற்றியதாக கூறி சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார். அதுமட்டுமின்றி telsa power bank செயலி மூலமாகவும் பணம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டதாக கூறி மூன்றுக்கும் மேற்பட்ட வரும் புகார் அளித்துள்ளனர்.

செயலி மூலம் முதலீடு செய்தால் வருமானம் இரட்டிப்பு என நூதன திருட்டு: டெல்லி கும்பலுக்கு சைபர் க்ரைம் வலை!

இந்தப் புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த செயலின் தொடர்பாக டெல்லியை சேர்ந்த மோசடி கும்பலையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதேபோல் இந்திய ரிசர்வ் வங்கி மூலம் அங்கீகாரம் பெற்ற வங்கிகளில் மட்டுமே முதலீடு மற்றும் லோன் பெறுதல் போன்றவற்றுக்கு மக்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அங்கீகாரம் இல்லாத இதுபோன்ற போலி செயலிகள் மூலம் மோசடியில் ஈடுபடும் கும்பல்களை நம்ப வேண்டாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories