தமிழ்நாடு

“நாளை மாலையே தமிழ்நாட்டில் 1 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கும்” : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

“கொரோனா மூன்றாம் அலை வந்தாலும் அதனை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது” என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

“நாளை மாலையே தமிழ்நாட்டில் 1 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கும்” : அமைச்சர் மா.சுப்பிரமணியன்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழ்நாட்டில் நாளை மாலையே தமிழ்நாட்டில் 1 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு இருக்கும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “தமிழ்நாட்டிற்கு இதுவரை 1 கோடி 2 லட்சத்துக்கு 49 ஆயிரம் தடுப்பு மருந்துகள் வந்துள்ளன. இதுவரை 97 லட்சம் 65 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தற்போது கையிருப்பில் உள்ள 85 ஆயிரம் டோஸ் தமிழ்நாடு முழுக்க அனுப்பப்பட்டுள்ளது.

இது போக 3 லட்சத்து 65 ஆயிரம் கூடுதலாக இன்று வந்துள்ளது. இதுவும் தமிழ்நாடு முழுக்க அனுப்பப்படும். நாளை மாலையே தமிழ்நாட்டில் 1 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு இருக்கும்.

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை செயல்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது. பாரத் பயோடெக் நிறுவனம் மூலம் இதற்கான ஆலோசனைகளைச் செய்து வருகிறோம். ஒன்றிய அரசு இதை நடத்தினால், தமிழ்நாடு அரசு அதற்கு ஆதரவு அளிக்கவும் தயாராக உள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 1,299 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது. கருப்பு பூஞ்சை பரவல் குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பும் குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் 50 ஆயிரம் படுக்கைகள் காலியாக உள்ளன.

ஊரடங்கில் தளர்வு அளிப்பதால் மக்கள் தேவையின்றி வெளியே செல்லக்கூடாது. தேவையின்றி மக்கள் வெளியே சுற்றுவதால் பாதிப்பு எண்ணிக்கை உயரும். தமிழ்நாடு அரசின் சுகாதார கட்டமைப்பு முழு பலத்துடன் இருக்கிறது. கொரோனா மூன்றாம் அலை வந்தாலும் அதனை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories