தமிழ்நாடு

“மக்களை மகிழ்விக்கும் 'சின்னக் கலைவாணர்' விவேக் விரைந்து நலம்பெறவேண்டும்” : மு.க.ஸ்டாலின் விருப்பம்!

நகைச்சுவை நடிகர் விவேக் விரைந்து உடல்நலம் பெறவேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விருப்பம் தெரிவித்துள்ளார்.

“மக்களை மகிழ்விக்கும் 'சின்னக் கலைவாணர்' விவேக் விரைந்து நலம்பெறவேண்டும்” : மு.க.ஸ்டாலின் விருப்பம்!
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நகைச்சுவை நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று தனது வீட்டிலிருந்த விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்டவே அவரது குடும்பத்தினர் உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் விவேக்கின் உடல்நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதாக அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா விழிப்புணர்வு பணிகளிலும் ஈடுபட்டு வந்த நடிகர் விவேக்கிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நடிகர் விவேக் விரைந்து நலம்பெறவேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விருப்பம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

“சமூக சீர்திருத்தக் கருத்துகளுடன் கூடிய நகைச்சுவையால் மக்களை மகிழ்விக்கும் 'சின்னக் கலைவாணர்' விவேக் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை அறிந்து வருத்தமுற்றேன். அவர் விரைவில் முழுமையான நலன் பெற்று தனது கலைச் சேவையையும், சூழலியல் பணிகளையும் தொடர வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories