தமிழ்நாடு

நீடிக்கும் மேலடுக்கு சுழற்சி.. அடுத்த 2 நாட்களுக்கு சென்னை உட்பட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீடிக்கும் மேலடுக்கு சுழற்சி.. அடுத்த 2 நாட்களுக்கு சென்னை உட்பட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குமரிக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வட தமிழகம் வரை நீடிப்பதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசான முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்தில் உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.

நீடிக்கும் மேலடுக்கு சுழற்சி.. அடுத்த 2 நாட்களுக்கு சென்னை உட்பட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

அதனையடுத்து அடுத்த 72 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

banner

Related Stories

Related Stories