தமிழ்நாடு

கல்வி, வேலைவாய்ப்பில் 3ம் பாலினத்தவருக்கான தனி இடஒதுக்கீடு என்ன ஆனது? - தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு கோரிய வழக்கில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 கல்வி, வேலைவாய்ப்பில் 3ம் பாலினத்தவருக்கான  தனி இடஒதுக்கீடு என்ன ஆனது? - தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருநங்கை, திருநம்பி எனும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி பிரிவாக பிரித்து, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிடக் கோரி சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த கிரேஸ் பானு கணேசன் என்ற திருநங்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த வழக்கில் தமிழக அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், மூன்றாம் பாலினத்தவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்த்து, இடஒதுக்கீடு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்.

குறிப்பிட்ட மூன்றாம் பாலினத்தவர் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவராக இருந்தால், அவருக்கு பல சலுகைகள் மறுக்கப்படுவதாகவும், திருநங்கைகள் நலவாரியத்தில் அரசுத்துறையினர் மட்டுமே இடம் பெற்றுள்ளதாகவும், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எந்த பிரதிநிதித்துவமும் வழங்கப்படவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், இது சம்பந்தமாக அக்டோபர் 29ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தனர்.

banner

Related Stories

Related Stories