தமிழ்நாடு

“ஒரே நாளில் 5,516 பேர் பாதிப்பு - 60 பேர் உயிரிழப்பு” : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்! #COVID19

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 5,516 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

“ஒரே நாளில் 5,516 பேர் பாதிப்பு - 60 பேர் உயிரிழப்பு” : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்! #COVID19
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,41,999 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 84,073 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 64 லட்சத்து 74 ஆயிரத்து 656 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 996 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 1,54,604 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் 5,556 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 81 ஆயிரத்து 273 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 46,453 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று மட்டும் தமிழகத்தில் கொரோனா பாதித்த 60 பேர் உயிரிழந்தனர். அதில், 30 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 36 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 8,811 ஆக அதிகரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories