தமிழ்நாடு

சென்னை அயனாவரத்தில் பிரபல ரவுடி சங்கர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

சென்னை அயனாவரத்தில் சங்கர் என்ற பிரபல ரவுடி காவல் துறையால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை அயனாவரத்தில் சங்கர் என்ற பிரபல ரவுடி காவல் துறையால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

புதிய ஆவடி சாலையில் கஞ்சா வியாபாரியும் பிரபல ரவுடிமான சங்கரை கைது செய்ய அயனாவரம் ஆய்வாளர் நடராஜ் தலைமையிலான போலிசார் சென்றுள்ளனர். அப்பொழுது ரவுடி சங்கர் போலிஸிடமிருந்து தப்பித்து செல்ல, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து காவலர் முபாரக் என்பவரை சரமாரியாக வெட்டியுள்ளார் சங்கர்.

சென்னை அயனாவரத்தில் பிரபல ரவுடி சங்கர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

இதனால் காவல்துறை தங்களை தற்காத்துக்கொள்ள ரவுடி சங்கரை காவல் ஆய்வாளர் நட்ராஜ் துப்பாகியால் சுட்டதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

இதில் உடலில் குண்டு பாய்ந்த நிலையில் ரவுடி சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த சம்பவத்தின்போது படுகாயமடைந்த காவலர் முபார்கக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல ரவுடி சங்கர் மீது 4 கொலை வழக்குகள், 4 கொலை முயற்சி வழக்குகள், 29 அடிதடி, ஆட்கடத்தல் வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories